யாழ். மாவட்டத்தில் உள்ளள 12 உள்ளூராட்சி சபைகளுக்கான சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று யாழ். மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ம.பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் 11 மணியளவில் வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டது.
நேற்றையதினம் யாழில் உள்ள 05 பிரதேச சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதுடன் இன்று 12 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
17 உள்ளுராட்சி மன்றங்களின் முதன்மை வேட்பாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

