யாழ்ப்பாணம் அளவெட்டி – விசவெட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே தவறான முடிவெடுத்து நேற்று (21-03-2025 ) உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
அளவெட்டி – விசவெட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த நபர் கடந்த 18ஆம் திகதி அவரது மைத்துனருடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபர் தனது மைத்துனரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பியவர், வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டுள்ள நிலையில், மன விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

