இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதி கடற்படை தளபதி மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பிரிட்டன் மேலும் தெரிவித்துள்ளதாவது
பிரிட்டன் இன்று ,லங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.
வெளிநாடுகளில் ஸ்திரதன்மையை ஊக்குவிப்பது எங்களின் தேசிய பாதுகாப்பிற்குஉஉகந்த விடயம் என்பதை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான இணைத்தலைமை நாடுகளுடன் இணைந்து இலங்கையில் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் பிரிட்டன் எப்போதும் ஈடுபட்டுவந்துள்ளது.
பிரிட்டனால் தடைவிதிக்கப்பட்டவர்கள்
முன்னாள் இராணுவதளபதி சவேந்திர சில்வா,
முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட,
முன்னாள் ,ராணுவதளபதி ஜகத்ஜெயசூரிய.
முற்றும் கருணா அம்மான் என அழைக்கப்படும் முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகள் விதித்துள்ளது
,

