பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டத்தில் உள்ள ஆரா தொடரூந்து ; நிலையத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
20 வயதான அமன் குமார் முதலில் அப்பெண்ணையும் அதன் பின் அவளது தந்தையையும் தொடரூந்து நிலையத்தில் நடைமேடைகளுக்குச் செல்லும் நடைபாலத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொன்றார்.
பின் அதே இடத்திலேயே தானும் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.
இந்த சம்பத்தால் அங்கிருந்த பயணிகள் அதிரிச்சியில் மூழ்கினர்.
ஆர்பிஎப் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்த மூவரும் உத்வாண்ட்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.
பெண்ணின் பெயர் ஜியா குமாரி (18), வயது தந்தையின் பெயர் அனில் சின்கா (50). வயது காதல் விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
அந்த பெண் டெல்லிக்கு செல்வதற்காக தொடரூந்து நிலையம் வந்திருந்தாக தெரியவருகின்றது

