நல்லாட்சி அரசாங்கம் இணங்கிய 2015 ஜெனீவா தீர்மானத்திலிருந்த வெளிநாட்டு நீதிபதிகள் என்பது நீக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான சமீபத்திய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் உயர் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆதரித்த தீர்மானத்தில், எந்தவொரு பொறுப்புகூறல் செயல்முறைக்கும் நம்பகத்தன்மை ஏற்படுத்த சர்வதேச பங்கேற்பு அவசியம் என வெளிப்படையாக வலியுறுத்தப்பட்டிருந்தது. அதில், வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறும் கலப்பு போர் குற்ற விசாரணை அமைப்பை அமைக்க நல்லாட்சி அரசு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்கா இணைந்துகொண்டிருந்தமை […]