புத்தளம் மீன்வாடியில் 100 கோடி பெறுமதியான மருந்து வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன
கற்பிட்டி கண்டக்குழி குடா கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்வாடிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூறு கோடிக்கு மேற்பட்ட பெறுமதி வாய்ந்த சட்டவிரோத மருந்து வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமாக இருந்த மீன்வாடிக்குள் வைத்திருந்த பொதிகளை பொலிஸார் சோதனை செய்தனர். அதன் போது புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கு உபயோகப்படும் மருந்து வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறான மருந்துகள் […]