முக்கிய செய்திகள்

தமிழர் தாயக அரசியலுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் ஜனாதிபதி இறங்கியுள்ளதாக அருட்தந்தை மா.சத்திவேல் குற்றச்சாட்டு

  • February 5, 2025
  • 0 Comments

ஐ.நா. மனித உரிமை பேரவையில் எமக்கான உரையாடல் கதவையும் மூடுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனாதிபதியுமாகிய அனுர குமார திசாநாயக்க அவர்கள் யாழ். அபிவிருத்திக் குழு கூட்டம் என வடக்குக்கு வந்து தமது […]

இந்தியா

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு இம்முறை 2500 பேர் செல்ல முடிவு

  • January 30, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் 14, 15-ந்தேதிகளில் நடைபெறுகிறது. திருவிழா அழைப்பிதழானது யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் மூலம் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ, ராமேசுவரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு […]

முக்கிய செய்திகள்

கனடாவின் பிரதமாராக்குங்கள் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துகின்றேன்- கனேடிய கொன்சவேட்டிவ் கட்சி தலைவர் பியெர் பொய்லிவ்

  • January 30, 2025
  • 0 Comments

கனடாவில் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் நடைப்பபெற்ற குற்றங்களுக்காக அதனை சர்வதேச நீதிமன்றத்தலி நிறுத்துவதற்குரிய நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனடாவின் டொரன்டோ நகரில் ‘ஹார்வெஸ்ட் ஒஃப் ஹோப்’ எனும் மகுடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பியெர் பொய்லிவ் இவ்வாறு கனேடிய தமிழ் சமூகத்திடம் உறுதியளித்துள்ளார் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை […]

முக்கிய செய்திகள்

இலங்கையும் அமெரிக்காவும் ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாடுகள் என அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்

  • January 30, 2025
  • 0 Comments

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பிரஜைகளின் பங்கேற்பு என்பவற்றை ஊக்குவிக்கும் திறந்த அரசுப் பங்குடமை போன்ற திட்டங்கள் மூலம் ஆழமான ஒத்துழைப்புக்களை ஏற்படுத்த முடியும் என இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஸானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்குத் […]

முக்கிய செய்திகள்

அரசாங்கம் அலாக்காக அடித்தது பெல்டி அதானி குழுமத்துடனான ஒப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை- அரசாங்கம்

  • January 25, 2025
  • 0 Comments

மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பாக அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக அமைச்சரவை முடிவெடுக்கவிலலையென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஆதானி காற்றாலை திட்டத்தால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டணங்களை மட்டுமே மறு ஆய்வு செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார் ஆதானி திட்டம் தொடர்பாக தற்போது நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகளில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்தும் தாம் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார். […]

முக்கிய செய்திகள்

அமெரிக்க நீதிமன்றம் டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்தது

  • January 25, 2025
  • 0 Comments

அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெறாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக கடந்த திங்கள்கிழமை பதவியேற்ற டிரம்ப் பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார் இந்த உத்தரவு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ம் திகதி முதல் அமலுக்கு வரும் என்பதால் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அறுவை சிகிச்சை வழியாக […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குடிவரவு அதிகாரி கைது!

  • January 23, 2025
  • 0 Comments

5 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றுக்கொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், நல்லூர் வடக்குப் பகுதியை சேர்ந்த நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்ட நபர், வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு மையத்திலிருந்து விடுவிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக சந்தேகநபர் இந்த இலஞ்சத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது. சந்தேகநபர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெலிசறை […]

இந்தியா

சீமானின் வீட்டிற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்

  • January 22, 2025
  • 0 Comments

சீமான் வீடு முற்றுகையிடப்படும் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஸ்ணன் தெரிவித்து இருந்தார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இது தொடர்பாக காவல் நிலையங்களில் சீமான் மீது 60-க்கு மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (22-01-2025 ) சீமான் வீடு முற்றுகையிடப்படும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்து இருந்தார். பெரியாரிய உணர்வாளர்கள் […]

முக்கிய செய்திகள்

சட்டத்தரணி சுமந்திரனை விசாரணைக்குட்படுத்துமாறு சிறிதரன் எம்பி பாராளுமன்றத்தில் முழக்கம்

  • January 22, 2025
  • 0 Comments

தமிழரசுக் கட்சியின் உட்கட்சி சண்டை பாராளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டதன் பின்னணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளார் என்ற தொனிப்பிட சிறிதரன் நேற்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி போராடுவதற்காக பாராளுமன்றம் அனுப்பபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனக்கு சுமந்திரனிடமிருந்து நீதி வேண்டி நேற்று பாராளுமன்றத்pல் சபாநாயகரிடம் விநயமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்க கோரி மகஜர் கையளிப்பு

  • January 21, 2025
  • 0 Comments

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் நேற்று (20) மாலை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினர். தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விடுவிப்பு தொடர்பில் அண்மையில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர். இதன் தொடர்ச்சியாக சேகரிக்கப்பட்ட சுமார் 2500 பேரின் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரை நாட்டின் […]