முக்கிய செய்திகள்

கூலி தொழில் சுத்திகரிப்பு தொழில் போன்று வேடமிட்டது தொடர்பில் விளக்கம் கொடுத்துள்ளோம்- வடமாகாண பட்டதாரிகள்

  • January 21, 2025
  • 0 Comments

யாழ் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூதியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனஈர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர். இதன் பொழுது வேலை வேண்டும் வேலை வேண்டும் பட்டதாரிகளுக்கு வேலை வேண்டும், படித்தும் பரதேசிகளாக இன்றும் தொடரும் அவலம், பல பரீட்சைகளை தொடர்ந்து என்ன பிரியோசனம் என்றவாறு பல கோஷங்களை எழுப்பிய வண்ணம் உலகதழிராய்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் இருந்து யாழ் நகரினூடாக ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று அங்கு போராட்டத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அதானி ஒப்பந்த வழக்கினை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது

  • January 16, 2025
  • 0 Comments

மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டம் தொடர்பில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை வலுவற்றதாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மே மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) உத்தரவு பிறப்பித்தது. குறித்த மனுவை இலங்கை பசுமை அமைப்பின் தலைவர் சந்திம அபயவர்தன சமர்ப்பித்தார். இந்த மனுவை இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம்.யூ.பி. கரலியத்தவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டம் தொடர்பான பல […]

உள்ளூர்

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்கள் மாயம்!

  • January 15, 2025
  • 0 Comments

கடந்த காலகட்டத்தில் மாகாண சபைகளுக்குச் சொந்தமான இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொது நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறு காணாமல் போன வாகனங்களில் பல சொகுசு கார்கள் மற்றும் ஜீப் வண்டிகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி மாகாண சபைகளின் பல்வேறு அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களே அவ்வப்போது காணாமல் போயுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அந்த வாகனங்கள் குறித்த தகவல்களைக் கண்டறிய […]

முக்கிய செய்திகள்

இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்

  • January 14, 2025
  • 0 Comments

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன் அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதனை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார் மேலும் டிஜிட்டல் அடையாள அட்டை முறையை உருவாக்குவதற்கு […]

முக்கிய செய்திகள்

அநுர அரசு உள்ளுராட்சிமன்றத் தேரத்தலை பிற்போட முடியாது – மஹிந்த தேசப்பிரிய

  • January 13, 2025
  • 0 Comments

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எக்காரணிகளுக்காகவும் தேர்தலை பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கொழும்பு தேசிய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்காகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து, […]

உள்ளூர்

யாழ் பல்கலையில் மலையகத் தியாகிகள் மற்றும் 51ஆவது தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல்கள் !

  • January 10, 2025
  • 0 Comments

தேயிலைச் செடிகளின் நடுவே உழைப்புச் சுரண்டல்களுக்கும் அடிப்படை உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கி அடிமைப்படுத்தப்பட்ட மலையக தமிழ் மக்களினுடைய சமூக அரசியல் விடுதலைக்கான பயணத்தில் தம்முயிர் தந்த எம்மவர்களை நினைவேந்தும் மலையக தியாகிகள் தினம் ஜனவரி 10 அனுஷ்டிக்கப்படுகின்றது. 1974 ஆம் ஆண்டு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சிறீலங்கா அரச காவல்துறையால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்து 2025 ஆம் ஆண்டுடன் ஆண்டுகள் 51. இன்றுவரையில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நீதி என்பது மறுக்கப்பட்டதொன்றாகவே […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் மது போதையில் துவிச்சக்கர வண்டி செலுத்தியவருக்கு 25 ஆயிரம் தண்டம்!

  • January 10, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மது போதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்திய நபருக்கு 25 ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மது போதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்தி சென்ற சமயம் அச்சுவேலி பொலிஸார் குறித்த நபரை கைது செய்து, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது , தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , நீதிமன்று அந்நபருக்கு 25ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. […]

முக்கிய செய்திகள்

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

  • January 9, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் அதிகாரசபைகள் தேர்தல்கள் தொடர்பான சட்டமூலத்தை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்திம அபேரத்ன, முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பித்தார். பாராளுமன்றத்தில் (09) நடைபெற்ற அமர்வின் போது சட்டமூல சமர்ப்பண முன்னறிவித்தலின் போது சட்டமூலத்தை சமர்ப்பித்தார். குறித்த சில உள்ளூர் அதிகார சபைகளின் தேர்தல்கள் கோரப்பட்டு பிற்போடப்பட்டுள்ளவிடத்து, அத்தகைய உள்ளூர் அதிகாரசபைகள் தொடர்பில் புதிய நியமனப்பத்திரங்களைக் கோருவதற்காகவும், தேர்தல்களை நடாத்துவதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அதனோடு தொடர்புப்பட்ட அல்லது அதன் […]

முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சபையிலிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக எச்சரிக்கை

  • January 9, 2025
  • 0 Comments

; யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது பாராளுமன்ற உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சபாநாயகருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தை பெறமுடியாமலிருப்பது குறித்த தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுவதாக அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையில் எனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு இந்த உரிமை மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் உங்கள் அலுவலகம் அறிவித்தது போல இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த விவகாரத்திற்கு […]

உள்ளூர்

வடமாகணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது!

  • January 4, 2025
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பால் வட மாகாணத்திற்குள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் தென்பகுதியில் உள்ள தனியார் துறையுடன் போட்டி போடக்கூடிய பல சிறந்த தரமான பால் உற்பத்தி மையங்கள் வட மாகாணத்தில் கூட்டுறவு துறையினூடாக உருவாக்கப்பட வேண்டும் என வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட கூட்டுறவு சபை மற்றும் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியும் இணைந்து தந்தை செல்வா ஞாபகார்த்த மண்டபத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள், […]