கிளிநொச்சி விபத்தில் படுகாயமடைந்த தாயும் உயிரிழப்பு!
கிளிநொச்சி நகரில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் ரக வாகனம் மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்திருந்த நிலையில்இ சம்பவத்தன்றே இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. தந்தை தாய் மற்றும் மகள் ஆகியோர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்இ இன்றைய தினம் தாயும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். […]