உள்ளூர்

பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை அதானியின் மின் கோபுர பாகங்கள் மன்னரை வந்தடைந்தது

  • August 6, 2025
  • 0 Comments

காற்றாலை மின் கோபுர பாகங்களை ஏற்றிய பாரிய வாகனங்கள், மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று (6) அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்துள்ளன. இந்த காற்றாலை மின் கோபுர பாகங்களை மன்னார் நகருக்குள் எடுத்து வரக்கூடாது எனக் கோரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (3-08) இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் போராட்டம் நீடித்தது. நேற்றைய தினம் (5-08) காலை மன்னார் பஜார் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய

  • August 2, 2025
  • 0 Comments

கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய திட்டத்தின் எட்டாவது அமர்வு இன்று யாழ்ப்பாணம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. இலங்கை கல்விச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் சந்திரசேகரன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுபோவ, வடக்கு மாகாண பிரதம செயலாளர் […]

உள்ளூர்

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட பொருட்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றது

  • August 2, 2025
  • 0 Comments

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட உடைகள் மற்றும் பிற பொருட்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி அடையாளம் காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆகஸ்ட் 5, 2025 அன்று பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலான நேரத்தில், இந்த பொருட்கள் செம்மணி அகழ்விட வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இவை தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் நீதிமன்றத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. […]

உள்ளூர்

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் அநுர அரசு வந்தும் மக்களின் வாழ்க்கையில்மாற்றம் இல்லையென அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

  • August 1, 2025
  • 0 Comments

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்தும் வடக்குப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். கிளிநொச்சி பளை பகுதியில் அமைந்துள்ள பிராந்திய தென்னை பயிர்ச்செய்கை சபைக்கு இன்று விஜயம் செய்த அவர், அங்கு உத்தியோகத்தர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போது இவ்வாறு கருத்து வெளியிட்டார். அமைச்சருடன் பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த […]

உள்ளூர்

கிளிநொச்சி பரந்தனில் விபத்து பெண் பலி, டிப்பர் சாரதி நையப்புடைப்பு

  • July 31, 2025
  • 0 Comments

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர், பின்னால் வந்த டிப்பர் ஒன்று முந்திச்செல்ல முயற்சித்த வேளையில் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி, சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே சில நேரம் முறுகல் நிலையும் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக […]

உள்ளூர்

கல்முனை வடக்கு உப பிரதேசசெயலக வழக்கு 2026 ஜனவரி மாதம் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

  • July 30, 2025
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி வழக்கு தொடர்ந்தார். இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் இருந்தனர். அவர்களது பிரதிநிதிகளான ஜனாதிபதி சட்டத்தரணிகள் சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் பைஸர் முஸ்தபா தலைமையிலான குழு மற்றும் தவராசா கலையரசன் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதற்கான சாட்சி – அருட்தந்தை மா.சத்திவேல்

  • July 29, 2025
  • 0 Comments

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் நலமே வாழ வேண்டும் என்பதோடு; இயற்கையும் சுற்றுச்சூழலும் தன் நிலை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையின் இளம் அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு விடயங்களை பார்த்தறிந்துள்ளனர்

  • July 29, 2025
  • 0 Comments

இலங்கையின் 14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேர் உள்ளிட்ட பேராளர்கள்இ கடந்த 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்கள்இ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்இ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்இ இளைஞர் அணி தலைவர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். இந்தியாவின் டெல்லிஇ பீகார்இ கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற இக்குழுஇ அபிவிருத்தி திட்டங்கள்இ பொருளாதார நவீனத்துவம்இ தொழில்நுட்ப முன்னேற்றங்கள்இ ஜனநாயக பாரம்பரியம் மற்றும் கலாசார […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாமல் ராஜபக்ஸ எம்.பி இன்று நாடு திரும்பியுள்ளார்.

  • July 29, 2025
  • 0 Comments

அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று காலை நாடு திரும்பியுள்ளார். எனினும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை கைது செய்ய பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கு சென்ற அதே விமானத்தில், தனிப்பட்ட தேவைக்காக நேற்று (28-07) நாமல் ராஜபக்ஸ வெளிநாடு சென்றிருந்தார். 2017ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் […]

உள்ளூர்

‘நேற்று – இன்று – நாளை’ எனும் தொனிப்பொருளில் கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு நடைப்பபெற்றது

  • July 28, 2025
  • 0 Comments

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத் தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக யாழ்ப்பாணத்தில் நேற்று இக்கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தலைமையில் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பம், சிவஞானம் சிறிதரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செ.கஜேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சட்டத்தரணி ப.குகனேஸ்வரன், சமூக அரசியல் செயற்பாட்டாளர் சி.சிவமோகன் என பலர் […]