கல்விச் சீர்திருத்தமானது ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றியமைப்பதாக அமையும்- பிரதமர் ஹரிணி
கல்விச் சீர்திருத்தம் என்பது வெறுமனே புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்துவது அல்ல, மாறாக ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றியமைப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ‘வளமான நாட்டுக்காக பெண்களாகிய நாம் அனைவரும் ஒன்றாக’ எனும் தலைப்பில், இரத்தினபுரி நகர மண்டபத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கல்வி முறைமை பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் சுமையாக இருக்கக் கூடாது என்றும், இது தமது அரசியல் இயக்கத்தில் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்ட விடயமாகவும், தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இடம்பெற்றுள்ளதெனவும் […]