உள்ளூர் முக்கிய செய்திகள்

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை ‘ஏற்றுக்கொள்ள முடியாதென்கிறார் அமைச்சரவை பேச்சாளர்

  • July 15, 2025
  • 0 Comments

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், தபால் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் மத்தியரவு (15) முதல் அனைத்து அதிபடி வேலைகளிலிருந்தும் விலகும் வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டின் பின்னர் திட்டமிட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு வராததை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கோரவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழிற்சங்கம் கூறியுள்ளது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, […]

உள்ளூர்

யாழ் மாவட்டத்தில் மட்டும் 30 வீத நிலப்பரப்புகளை அரசு அபகரித்துள்ளதாக கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

  • July 15, 2025
  • 0 Comments

போர் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளாகியும், தமிழ்மக்கள் தங்களின் சொந்த நிலங்களுக்கு திரும்ப முடியாததற்கு தற்போதைய அரசு மற்றும் கடந்த அரசுகள் பொறுப்பாளிகள் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். யாழ்ப்பாணம் வலிகாமத்தில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் படையினரால் கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவிக்கக் கோரி, ஜனாதிபதி செயலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ‘அதிஉயர் பாதுகாப்பு வலயம்’ என்ற பெயரில் சட்டரீதியான ஏற்பாடுகள் இல்லாமலேயே […]

உள்ளூர்

இன்று நள்ளிரவு முதல் தபால் சேவைகள் வேலைநிறுத்தம்

  • July 15, 2025
  • 0 Comments

இன்று (ஜூலை 15) நள்ளிரவு முதல், இலங்கை தபால் சேவைகளின் அலுவலகங்களிலும் நிர்வாகத் துறைகளிலும் ஊழியர்கள் அதிக நேர வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளனர் என தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம், பணியில் சேர்ப்பதற்கான நடைமுறைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி முன்னெடுக்கப்படுகிறது என, அந்த கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். தொழிற்சங்கத் தரப்பினரின் இந்த நடவடிக்கையால், நாளைய தினங்களில் அறிவிப்பு இல்லாத தாமதங்கள் மற்றும் சேவை இடையூறுகள் ஏற்படக்கூடிய நிலை உருவாகலாம்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

அரசின் அசமந்த போக்காலேயே அமெரிக்க தீர்வை வரியை மேலும் குறைக்க முடியாமற்போனது – திஸ்ஸ அத்தநாயக்க

  • July 15, 2025
  • 0 Comments

அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் சரியான முறையில் செயற்பட்டிருந்தால், அமெரிக்காவின் தீர்வை வரியை இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் அளவுக்கு குறைத்துக்கொள்ள முடிந்திருக்கும். அதேநேரம் தற்போது 30 சதவீதத்துக்கு குறைத்துக்கொண்டிருப்பதன் மூலம் மகிழச்சியடைய முடியுமா என்பதை எமக்கு போட்டியாக இருக்கும் நாடுகளுடன் சந்தை நிலவரத்தின் பிரகாரமே தீர்மானிக்க முடியுமென ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்று (14-07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். […]

உள்ளூர்

இந்தியா மீதான அமெரிக்க வரியால் இலங்கைக்கும் பாதிப்பென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது

  • July 13, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கு எந்தளவு வரி அறிவிக்கப்படவுள்ளது என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இந்தியாவுக்கு விதிக்கப்படும் வரியும் எமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் முழு நாடும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (11-07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆசியாவில் இலங்கை மாத்திரமே அமெரிக்காவுடன் தீர்வை வரி தொடர்பில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பால்மா விலை அதிகரிப்பிற்கான காரணத்தை மத்திய வங்கி விளக்கியுள்ளது

  • July 12, 2025
  • 0 Comments

பால்மா விலை உயர்வுக்கு முதன்மையான காரணமாக, இலங்கை அரசாங்கம் சமீபத்தில் அமெரிக்காவுடன் கொண்டிருந்த வரிச் சலுகை ஒப்பந்தத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காணப்படுகின்றன. அதன்படி சில இறக்குமதிச் உhயசபநள குறைக்கப்பட்டாலும், நாணயமாற்றக் குறைபாடுகள் மற்றும் கொள்முதல் செலவுகள் அதிகரித்திருப்பதால், விலை உயர்த்தியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர் இதற்கிடையில் மத்திய வங்கியின் ஆளுநர், பால் மா விலை அதிகரிப்பிற்கான காரணத்ததை விளக்கியுள்ளார் ‘இது மக்கள் எதிர்பார்த்தது போல் அமெரிக்காவுக்காக வழங்கப்பட்ட சலுகை அல்ல. நாட்டின் உள்நோக்கான பொருளாதார சீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு […]

உள்ளூர்

ஈஸ்ட்டர் தாக்குதல் விசாரணையில் வெளிப்படத்தன்மை இருக்குமென்கிறார் பிரதமர் ஹரணி

  • July 11, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் வெளிவரும் புதிய விடயங்களை தேவையான நேரத்தில் மக்களுக்கு அறிவிப்போம். இதில் மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு எதுவும் இல்லையென பிரதமரும் கல்வி, உயர்கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். சமிந்த விஜேசிறி தனது கேள்வியில், இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கூட்டுறவுத்துறையை வலிமைமிக்கதாய் மாற்ற மாகாணசபை தேர்தலை நடத்தவேண்டுமென்கிறார் நிசாம் காரியப்பர் எம்.பி

  • July 11, 2025
  • 0 Comments

கூட்டுறவு தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் மத்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிப்பது அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு முற்றிலும் எதிரானது. ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் அடக்கி வாசிப்பது அவசியமானது. கூட்டுறவு முறைமையை வினைத்திறனாக்க வேண்டுமாயின் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றியதாவது, கிராமிய கூட்டுறவு வங்கிக் கட்டமைப்பை உரிய முறையில் மேற்பார்வை […]

உள்ளூர்

பால் மாவுக்கு அரசு ஏன் 700 ரூபா வரியை விதிக்கின்றதென அசேல சம்பத் கேள்வி

  • July 11, 2025
  • 0 Comments

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் உயர்ந்துள்ளது. 400 கிராம் பெட்டிக்கு 100 ரூபா உயர்வு ஏற்பட்டுள்ளது, 1 கிலோ கிராம் பாக்கெட் விலை 250 ரூபா வரை உயர்ந்துவிட்டது என்று பால்மா இறக்குமதி சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வால், ஏற்கனவே பொருளாதார அழுத்தத்தில் வாழும் மக்களுக்கு மேலும் சுமை சேரும் என தேசிய நுகர்வோர் முன்னணி தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். அவர் நேற்று (10-07) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்: ‘ஒரு […]

உள்ளூர்

அமெரிக்க வரி விதிப்பால் 3 இலட்சம் பேர் வேலையிழக்கும் நிலையேற்பட்டுள்ளது

  • July 11, 2025
  • 0 Comments

அமெரிக்கா, 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுக்கு 30 வீத வரியை விதிக்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை, இலங்கையின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடைய ஆடை ஏற்றுமதித் துறையை ஆழமாகக் குலைக்கக்கூடியது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்தத் துறையில் சுமார் 300,000 பேர் நேரடியாக வேலை செய்து வருகின்றனர். மேலும், தனியார் தையல் தொழிலாளர்கள், சில்லறை தொழிலாளர்கள், மற்றும் பகுதி நேர உழைப்பாளர்கள் என ஏராளமான குடும்பங்கள் இதன் […]