உள்ளூர்

இந்தியாவுடனா செய்து கொண்ட மருந்துப்பொருள் ஒப்பந்ததால் இலங்கைக்கு பாதிப்பு – புபுது ஜயகொட

  • July 11, 2025
  • 0 Comments

அரசாங்கம் அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் செயல்முறையை நிராகரித்து, இந்தியாவுடன் செய்துகாண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் மருந்துபொருட்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இது இந்தியாவின் வியாபார நோக்கத்துக்காக எமது பொது சுகாதாரத்தை பழி கொடுக்கும் நடவடிக்கையாகும் என முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபது ஜயகொட தெரிவித்தார். முன்னிலை சோசலிச கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜனாதிபதியின் பெயரை திருத்தியமைத்து மீண்டும் அறிக்கையை வெளியிட்டது வெள்ளை மாளிகை

  • July 10, 2025
  • 0 Comments

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய அறிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெளியிட்டுள்ளார். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை (09-07) வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிக்கையை மீண்டும் வெளியிட்டு முன்னதாக வெளியிட்ட […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தாதியர்களின் ஓய்வூதிய வயது 60 என அரசினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

  • July 8, 2025
  • 0 Comments

செவிலியர்களின் கட்டாய ஓய்வூதிய வயதை 60 ஆகக் குறைத்ததால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் உருவாகக்கூடும் என அரசாங்க சேவை ஒன்றிய செவிலியர் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தெரிவித்ததாவது, ‘ஓய்வூதிய வயதைக் குறைத்ததால், தற்போது நிலவுகின்ற செவிலியர் பற்றாக்குறை மேலும் மோசமாகும்.’ முந்தைய காலங்களில், ஓய்வூதிய வயதை 63 வரை நீடிக்க வேண்டும் எனக்கோரி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதற்கு எதிராக சுகாதார அமைச்சால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி ஆனையிறவில் டிப்பரும் ஹையேஸ் வாகனமும் விபத்து பயணிகள் படுகாயம்

  • July 8, 2025
  • 0 Comments

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் 7ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5மணியளவில் டிப்பருடன் ஹையேஸ் மோதி பாரியளவான விபத்து ஒன்று சம்பவித்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற டிப்பருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹையேஸ் நேருக்கு நேர் மோதி பாரியளவான விபத்து ஏற்பட்ட நிலையில் ஹையேஸில் பயணித்த பயணிகள் எந்த வித உயிர்ச் சேதங்களும் இன்றி பலத்த காயங்களுடன் தப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலத்த காயம் அடைந்த […]

உள்ளூர்

அரசாங்கம் செய்த படுகொலைகளை அரசாங்கமே விசாரிக்கமுடியாது- தமிழரசுக்கட்சி

  • July 8, 2025
  • 0 Comments

உள்ளக விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை என கூறுவதன் ஊடாக அமைச்சர் விஜித்த ஹேரத், இது சிங்கள பௌத்த நாடு என்பதை மீளவலியுறுத்துவதுடன் தமிழர்களை மாற்றான் தாய் மனநிலையுடன் கையாள்வதாகச் சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசே விசாரணைகள் முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த வாரம் சிங்கள செய்திச்சேவை ஒன்றுக்கு அளித்திருக்கும் நேர்காணலில், நாட்டின் உள்ளக […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொரோன்னா மருந்து கொள்வனவில் முறைகேடென கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு நீதி அழைப்பானை

  • July 7, 2025
  • 0 Comments

நீதி மன்றத்தில் முன்னிலையாக அழைப்பு – கொவிட் எதிரெண்ணல் வாக்கஸீன் வாங்கல் விவகாரத்தில் கெஹெலியவுக்கு விசாரணை தரம் குறைந்த கொவிட் மருந்துகளை வாங்கிய விவகாரத்தில் குற்றச்சாட்டுகளுக்குள்ளான முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது. கொழும்பு நிலையான முப்படைக் கூட்டமைப்பு உயர் நீதிமன்றம், வரும் 11 ஆம் திகதி குறித்த சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தி அழைப்பாணையை பிறப்பித்துள்ளது. இவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகைகளை வழங்கும் நடவடிக்கையின் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இன்று முதல் தினமும் தொடரூந்து சேவை

  • July 7, 2025
  • 0 Comments

கொழும்பு – காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் தற்போது இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர் யாழ்தேவி […]

உள்ளூர்

இனி அரச மருத்துவமனைகளில் சிறந்த ஆரோக்கியமான உணவு வழங்கப்படும்- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

  • July 7, 2025
  • 0 Comments

அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு தரமான மற்றும் சுவையான உணவை வழங்குவதற்கான சிறப்பு திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நோயாளர்களுக்கான விசேட உணவு வேலைத்திட்டம் தொடர்பாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அண்மையில் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதற்கமைய மஹரகம புற்றுநோய் மருத்துவமனையை மையமாகக் கொண்டு இந்த […]

உள்ளூர்

தேசிய பாதுகாப்பு பாதிப்பை பலப்படுத்துவது எவ்வாறென அரசாங்கத்துக்கு வகுப்பெடுக்க வேண்டுமென்கிறார் சரத் வீரசேகர

  • July 7, 2025
  • 0 Comments

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன. தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு கற்பிக்க தயாராகவுள்ளோம் என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று (6-07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு வகுப்பறையில் அமர வைத்து கற்பிப்பதாக […]

உள்ளூர்

அரசாங்கமும் எதிர்கட்சியும் கொள்கலன்கள் விடயத்தில் இணைந்து செயற்படுகின்றது- புபுது ஜயகொட

  • July 7, 2025
  • 0 Comments

சுங்கத்தில் இருந்து கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்படும் நடவடிக்கை நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவே விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதனால் குறித்த வியாபாரிகளின் நிறுவனங்களின் பெயர் பட்டியலை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். முன்னிலை சோசலிச கட்சி காரியாலயத்தில் நேற்று (6-07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சுங்கத்தில் இருந்து பரிசோதனை இல்லாமல் கடந்த ஜனவரி […]