உள்ளூர்

யாழ். செம்மணியில் மேலும் 3 மனித சிதிலங்கள் கண்டுபிடிப்பு!

  • June 28, 2025
  • 0 Comments

யாழ். செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணியின் போது மேலும் மூன்று மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்றுவரை 24 மனித எலும்புக்கூட்டுத்தொகுதி அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றையதினம் மேலும் 3 மனித மனித எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டுத்தொகுதிகளின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த நாட்களில் அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டு தொகுதியில், தாயொருவர் குழந்தையை அணைத்த […]

உள்ளூர்

யாழில் கடற்தொழிலுக்கு சென்று காணாமல்போன மீனவரின் சடலம் கரையொதுங்கியது!

  • June 28, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்கு சென்று காணாமல்போன மீனவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது. மணல்காட்டை சேர்ந்த 38 வயதுடைய மீனவரின் சடலமே கரையொதுங்கியுள்ளார். சடலமாக கரையொதுங்கிய மீனவர் மணல்காட்டில் இருந்து கடந்த வியாழக்கிழமை (26-06) அதிகாலை கட்டுமரத்தில் தொழிலுக்காக கடலுக்குள் சென்றுள்ளார். கடலுக்கு சென்ற மீனவர் வழமையாக காலை 09 மணியளவில் கரை திரும்பி விடுவார். ஆனால் அன்றைய தினம் அவர் கரை திரும்பாததால் , சக தொழிலாளிகள் அவரை தேடி கடலுக்கு சென்ற வேளையில், அவரது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுமென பிரதி அமைச்சர் ரத்ன கமகே உறுதி

  • June 26, 2025
  • 0 Comments

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்திய இழுவைப் படகுகளால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் அதனால் ஏற்படும் சேதங்கள் குறித்து மீனவர் அமைப்பு பிரதிநிதிகள் கருத்துகளை முன்வைத்தனர். உரிமம் இன்றி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சுருக்கு மடி வலைகள் போன்ற தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் வெடிபொருட்கள், லைட் கோர்ஸ் மீன்பிடி முறைகள் […]

உள்ளூர்

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் முன்னாள் இந்நாள் எம்பிக்களை சந்தித்தார்

  • June 26, 2025
  • 0 Comments

யாழ். விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என சிலரை நேற்றரவு (25-06) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

யுத்த வடுக்களின் காயங்கள் ஆற காலங்கள் தேவையென ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

  • June 25, 2025
  • 0 Comments

பாதிக்கப்பட்ட மக்களின் காயங்கள் ஆறுவதற்கு சில காலம் தேவை. இருப்பினும் அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தவேண்டியது மிக அவசியம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்தார். அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களை நேற்று (24-06) பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழரசுக் கட்சி எம்.பி.ரவிகரன் தமிழரசுக் கட்சியின் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்

  • June 25, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளார். அந்த வகையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே ரவிகரன் பதவி விலகியுள்ளார். அதேவேளை ரவிகரன், தாம் கட்சிப் பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் […]

உள்ளூர்

மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்- ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

  • June 25, 2025
  • 0 Comments

நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நினைவுகூரல் என்பன இன்றியமையாதனவாகும். அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதிசெய்வதற்கும், அவர்களை ஆற்றுப்படுத்தவதற்கும் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். மிக மோசமான குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உண்மை பொதுவில் ஏற்றுக்கொள்ளப்படாவிடின் அது பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நிலவும் தாக்கங்கள் மேலும் தீவிரமடைவதற்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு வலுவடைவதற்கும் வழிவகுக்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்தார். […]

உள்ளூர்

வடக்கிலே தமிழர்கள் வற்றிபோகின்றார்கள் என ஆறு திருமுருகன் கவலை வெளியிட்டுள்ளார்.

  • June 25, 2025
  • 0 Comments

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நிறுவுனர் நினைவு தானமும் பரிசளிப்பு விழாவும் நேற்று (24-06) நடைபெற்ற நிலையில் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கிய சந்தர்ப்பத்திலே அவர் அங்கு உரையாற்றினார். இன்று தேசியம், தமிழ்த் தேசியம் மற்றும் சுதேசியம் ஆகிய சொற்களெல்லாம் அரசியல்வாதிகளிடத்தே அடிக்கடி நடமாடினாலும் மகாஜனாக் கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பா பிள்ளை அவர்கள் இந்த மண்ணிலே பிறந்த நாங்கள் ஏன் சுதேசியத்தைப் பாதுகாக்கக்கூடாது அதைப்பற்றி பேசக் கூடாது என்று அன்றே அடியெடுத்துக்கொடுத்தவர். அதனாலேயே அவரது சிலையின் பெயர்ப்பலகையில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்- அமைச்சர் சந்திரசேகர்

  • June 14, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022 மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. நிர்மாணப் பணிகளுக்கென 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது. எனினும், பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அந்நிலையம் முடங்கி, பறவைகளின் கூடாரமாக மாறியுள்ளது. இந்நிலையில் மக்களின் கோரிக்கையின் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழகத்திற்கும் யாழ்ப்பாணத்திற்குமான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்

  • June 14, 2025
  • 0 Comments

தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மணிக்கு 35 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனை அண்மித்த கொமொரின் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் எதிர்வரும் […]