உள்ளூர்

காணி அபகரிப்பு வர்த்தமானி அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிக்காது விடில் நாளை (28) மக்கள் போராட்ட முன்னெடுப்பு- சுமந்திரன்

  • May 27, 2025
  • 0 Comments

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய கூட்டத்தில் வடமாகாண காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீக்குவது குறித்து ஏதேனும் அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றவா என அவதானிப்போம். அவ்வாறு வெளியிடப்படாதவிடத்து நாளைய தினம் (28-05) மாபெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலையும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க ஆலோசனை

  • May 26, 2025
  • 0 Comments

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இரு […]

உலகம்

உக்ரைனின் விமானத் தாக்குதலில் இருந்து ரஷிய ஜனாதிபதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்

  • May 26, 2025
  • 0 Comments

ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் சென்ற ஹெலிகாப்டரை குறிவைத்து உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. இருப்பினும், புதின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவுக்குப் பிறகு புதின் பதற்றமான எல்லைப் பகுதியான குர்ஸ்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் ரஷியா உக்ரேனியப் படைகளை குர்ஸ்க் பகுதியிலிருந்து விரட்டியடித்ததாக அறிவித்த பிறகு, புதின் குர்ஸ்க் பகுதிக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். புதினின் ஹெலிகாப்டர் பாதையில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கைக்கு அமெரிக்கா விதித்த தீர்வை வரி தொடர்பான கலந்துரையாடல் நடைப்பெறவுள்ளது

  • May 26, 2025
  • 0 Comments

அமெரிக்காவினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பான கலந்துரையாடல் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. அமெரிக்காவின் வொஷிங்டனில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா செல்லவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர், கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான தொடர் முயற்சிகளை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது நேரடி சந்திப்பு இதுவாகும். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் தொடரும் சிக்கல்

  • May 26, 2025
  • 0 Comments

உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம், தமது கூட்டணி முன்னிலை பெற்றுள்ள சபைகளில் மேயர் மற்றும் தவிசாளர் பதவிகளுக்கு உறுப்பினர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி அறிவித்துள்ளது. அதேநேரம், எந்தவொரு தேசிய கட்சி ஆட்சி அமைப்பதற்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு அதிகமான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் வெளிப்படுத்தியுள்ளது. […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் 2 பட்டதாரி மகள்மாருக்கு திருமணம் நடக்காததால் தந்தை தற்கொலை

  • May 24, 2025
  • 0 Comments

யாழ் – சங்கானையில் பட்டதாரிகளான இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் நடைபெறவில்லை என மனமுடைந்த தந்தை தவறான முடிவெடுத்து நேற்று (23-05) உயிரிழந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவருக்கு 63 வயதாகும் இம் மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினார்.

உள்ளூர்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு

  • May 24, 2025
  • 0 Comments

தொழில்நுட்ப ரீதியாக மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சுசார் மட்டத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (23-05) நடைபெற்ற அமர்வில் சபை ஒத்திவைப்பு வேளையின் போது மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் 24 வயதுடைய இளம் குடும்பஸ்தர் மர்ம மரணம்

  • May 23, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று நேற்று (22-05) மாலை மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார். நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பின்னர் குறித்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ரவ்டி தேரரான அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!

  • May 23, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட சம்பவத்தையடுத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உஹன பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்த இரு பிள்ளைகளை பாதுகாப்பற்ற முறையில் முச்சக்கரவண்டியில் அழைத்துச் செல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேரர் அந்த பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படும் காணொளியொன்றும் சமூக […]

உள்ளூர்

யாழில் 30 வயது யுவதி திடீரென மரணம். அதிர்ச்சியில் குடும்பத்தினர்

  • May 23, 2025
  • 0 Comments

நேற்று முன்தினமிரவு (21-05 இரவு யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சந்திரராசா விதுஜாம்பாள் (வயது 30) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி புதன்கிழமை (21-05) இரவு சாப்பிட்டுவிட்டு இருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் முச்சக்கர வண்டி மூலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் இடைவழியில் உயிரிழந்துள்ளார். பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் […]