வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாட்சிக்கு பல தரப்புகளுடன் பேசுவதாக அரசாங்கம் தெரிவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாட்சியை ஏற்படுத்துவது குறித்து தேசிய மக்கள் சக்தி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத், இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் வெற்றியளித்துள்ளதாகவும் ஆளும் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு வடக்கு கிழக்கு அரசியல் தரப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். நடைப்பெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாடு முழுவதும் பெறப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் […]