உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 323 கிலோ கேரளா கஞ்சாவுடன் 3வர் கைது கைது

  • May 7, 2025
  • 0 Comments

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பேரை கடற்படையினர் நேற்று (06-05)இரவு கைது செய்துள்ளனர். எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து 323.35 கிலோ கேரள கஞ்சாவுடன் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பேசாலை பகுதியையும், மற்றைய இருவர் குருநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் வாக்களிப்பு நிலையத்தில் வாள்களுடன் இளைஞர்கள்

  • May 6, 2025
  • 0 Comments

கிளிநொச்சி – செல்வாநகர் பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் வாள்களுடன் நின்ற இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று பகல் 01.00 மணியளவில் செல்வாநகர் பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற கார் ஒன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இதன்போது காரினுள் இருந்து வாள் ஒன்றும் கத்தி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார நாடு திரும்பினார்

  • May 6, 2025
  • 0 Comments

வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பகல் மீண்டும் நாடு திரும்பினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து இன்று பகல் 01.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் […]

உள்ளூர்

ஊழலை ஒழிக்க உறுதிமொழி – இன நல்லிணக்கத்துக்கும் அரசு உறுதிபூர்வம்: சபாநாயகர்

  • May 5, 2025
  • 0 Comments

இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் புதிய அரசாங்கம் முழுமையான உறுதியுடன் செயற்படுவதாகவும், இன மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைகளை ஏற்படுத்தும் முயற்சிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். மேலும், ஊழலை ஒழிக்கும் தொடர்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். இவ்வகையான கருத்துகளை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் அவர்களை கடந்த (02) ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்து பேசியபோது […]

உள்ளூர்

கொழும்பில் பரபரப்பான காலை வேளையில் இளைஞனொருவனை துரத்தி துரத்தி சுட்ட துப்பாக்கிதாரிகள்

  • May 5, 2025
  • 0 Comments

கல்கிஸ்ஸை கடற்கரை வீதிக்கு திரும்பும் சந்தியில் இன் காலை 6.35 மணியளவில் 19 வயது இளைஞர் ஒருவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இளைஞர் சுடப்படுவதைக் காட்டும் மேலும் ஒரு சிசிடிவி காட்சிகள் வெளிவந்துள்ளது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சிராய்ப்புகளுடன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர் பின்னர் உயிரிழந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் நகர சபையின் ஊழியராக இருந்ததுடன், கடற்கரை வீதிக்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இம்முறை 455,520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்

  • May 5, 2025
  • 0 Comments

12 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இம்முறை 455,520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், அவர் கூறியதாவது: ‘உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வாக்களிப்பதற்காக, மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 477 வாக்களிப்பு நிலையங்கள் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளன. நடைபெற இருக்கும் உள்ளூர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்டத்திற்கான வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைக்கப்ட்டுள்ளது

  • May 5, 2025
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையமான திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் இருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை உரிய இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை தி. விபுலானந்தா கல்லூரியிலிருந்து வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுள்ளன. நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாக பொலிஸார் மற்றும் அதிரடி படைகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.  

உள்ளூர்

வவுனியாவில் 154 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிக்கள்; அனுப்பிவைக்கப்பட்டது

  • May 5, 2025
  • 0 Comments

வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வவுனியா மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 154 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள் மற்றும் ஏனைய தேவையான ஆவணங்கள் வவுனியா மாவட்டச்செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

உள்ளூர்

கிளிநொச்சியில் முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

  • May 5, 2025
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேரூந்துக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டன. நாளை நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ளு.முரளிதரன் , உதவித் தேர்தல் ஆணையாளர் வே. சிவராசா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  

உள்ளூர்

மன்னாரில் 114 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிக்கள் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு

  • May 5, 2025
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் உள்ள 05 உள்ளூராட்சி சபைகளுக்குமான வாக்குப் பெட்டிகள் இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மன்னார் நகர சபை,மன்னார்,மாந்தை மேற்கு,நானாட்டான், முசலி ஆகிய பிரதேச சபைகள் உள்ளடங்களாக 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப் பெட்டிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் வைபவ ரீதியாக இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் ஐந்து சபைகளில் 103 சபை உறுப்பினர்களை தெரிவு செய்ய 114 […]