உள்ளூர்

தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது

  • May 2, 2025
  • 0 Comments

எமது மக்களுக்காக இதுவரை ஏதோ ஒரு வழியில் உழைத்த எமது தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாக்களித்து, அவர்களின் கரங்களுக்கு கொடுப்பது அவசியம் என வடக்கு – கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் குறித்த சங்க பிரதிநிதிகள் ஊடக சந்திப்பொன்றை நடத்தியபோதே சங்கத்தினர் இதனை தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி என்பது எமக்கான […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசு தொழிலாளர்களின் உழைப்பினை சுரண்டுகின்றதென சஜித் பிரேமதாச மேதின குற்றச்சாட்டு

  • May 1, 2025
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எட்டிய இணக்கப்பாட்டுக்கமைய ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதியை சீர்குலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த கொள்கைக்கு பின்னால் சென்று தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் தொழிலாளர்களின் உழைப்பினை சுரண்டும் திட்டங்களை அவ்வாறே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார். தொழிலாளர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி என்றும் பாடுபடும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். தலவாக்கலையில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலதொடர்பாக 3,828 முறைப்பாடுகள் பதிவு

  • May 1, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி) 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 24 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3,563 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 241 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.  

உள்ளூர்

அப்பாவியான பிள்ளையானை சிறையில் வைத்திருப்பது கொடுமை என கருணா தெரிவித்துள்ளார்

  • May 1, 2025
  • 0 Comments

பிள்ளையான் தற்போது சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும். ஏற்கனவே இல்லாத பிரச்சினையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தார். அவர் அப்போது நிரபராதி என வெளியே வந்தார். அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது? அது போன்றதொரு விடயம்தான் தற்போதும் அவருக்கு நடந்துள்ளது. அதற்காக வேண்டி வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழல்கள் கத்திக்கொண்டு இருப்பார்கள் என முன்னாள் பிரதியமைச்சரும் தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாஅம்மான்) தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு தமிழர் […]

உள்ளூர்

மன்னாரில் மறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு

  • April 29, 2025
  • 0 Comments

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (28-04) மாலை மன்னாரில் இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பும் குறித்த நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் தயாராகவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு

  • April 28, 2025
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றம் செய்து தரவேண்டும். நாம் இதற்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்தார். முன்னை பாராளுமன்றத்தில் முன்னாள் எம்.பி. சுமந்திரன் கொண்டுவந்த தனி நபர் பிரேரணை போன்ற ஒன்றை தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்து அதனை நிறைவேற்றினால் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

  • April 25, 2025
  • 0 Comments

கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு கடுமையான மின்னல் தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. மின்னல் மற்றும் இடி ஏற்படும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில். வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு ஏற்பட்ட நிலை!

  • April 25, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் யாழ். புறநகர் பகுதியில் உள்ள யுவதி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அண்மையில் அடாவடியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில் குறித்த யுவதியால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் ,விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரைக் கைது செய்து ,விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் யாழ் நீதவான் நீதிமன்றில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் இன்றுவரை 429 முறைப்பாடுகள் பதிவு!

  • April 24, 2025
  • 0 Comments

2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த மார்ச் 03 முதல் ஏப்ரல் 24 வரை, தேர்தல் தொடர்பான மொத்தம் 429 முறைப்பாடுகளை இலங்கை பொலிஸார் பெற்றுள்ளனர். இந்த முறைப்பாடுகளில் 61 தேர்தல் வன்முறை தொடர்பானவை மற்றும் 222 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தக் காலகட்டத்தில், 25 வேட்பாளர்களும் 98 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், 23 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில், இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

12 வயது சிறுவனை மோட்டார் சைக்கிளில் இடித்து தள்ளி தப்பிச் சென்ற பெண்! – யாழில் சம்பவம்

  • April 23, 2025
  • 0 Comments

பாடசாலை மாணவன் ஒருவனை மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பிச் சென்ற சம்பவம் வட்டுக்கோட்டையில் நேற்று (22-04) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிக்கிய மாணவன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: வட்டுக்கோட்டையில் உள்ள பிரபல பாடசாலையொன்றுக்கு 12 வயதான அப்பாடசாலையின் மாணவன் வழமை போன்று தனது துவிச்சக்கரவண்டியில் சென்றுள்ளார். பாடசாலையின் அருகாமையில் தான் சென்றுகொண்டிருந்தபோது தனக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் […]