74 வயது மூதாட்டியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 24 வயது இளைஞன் கைது
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டப் பகுதியில் 74 வயது மூதாட்டியை 24 வயது இளைஞர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தை நிலைநாட்டு’, ‘கைது செய் போதை குற்றவாளியை கைது செய்’, ‘போதைப்பொருளை ஒழிப்போம்’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்ற ஹட்டன் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட […]