உள்ளூர் முக்கிய செய்திகள்

தபால்மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

  • April 20, 2025
  • 0 Comments

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு இன்று (20) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மாத்திரமே தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்>இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனம் அடையாளம்! https://www.youtube.com/@pathivunews/videos

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் 69 வயதான பெண்மணி அடித்து படுகொலை!

  • April 20, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் 69 வயதான மூதாட்டி ஒருவர் பொல்லினால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் திருடும் நோக்குடன் சென்ற இளைஞனே மூதாட்டியை தாக்கி படுகொலை செய்துள்ளார் எனும் குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் இரண்டு மூதாட்டிகள் வசித்து வருகின்றனர். அதில் ஒருவர் இன்று காலை உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்கு சென்றுள்ளார். மற்றையவர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அந்நிலையில் இரு மூதாட்டிகளும் தேவாலயத்திற்கு சென்றுள்ளார்கள் […]

இந்தியா உள்ளூர் சினிமா

வீ.ஜே. பிரியங்கா திருகோணமலை மருமகளானார். இரா.சம்பந்தனின் மருமகனை கரம் பிடித்தார்

  • April 20, 2025
  • 0 Comments

பிரபல இந்திய விஜே தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் வசி என்பவருக்கும் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பிரியங்காவின் கணவர் வசி இலங்கையைச் சேர்ந்தவர் என்ற தகவல் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழராவார். இவர் இலங்கை திருகோணமலையை சேர்ந்தவர மேலும், இலங்கை வாழ் தமிழர்களிடையே ஆதரவைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மறைந்த இரா.சம்பந்தனின் தங்கையின் மகனாவார். அதுமட்டுமில்லாது, இலங்கையில் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியும் நடத்தி […]

உள்ளூர்

உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

  • April 20, 2025
  • 0 Comments

இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் 40 நாட்கள் தவக் காலத்தில் கிறிஸ்தவர்கள் மதக் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் முகமாக இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகின்றனர். அதற்கமைய, கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில், பிரதான உயிர்த்த ஞாயிறு ஆராதனை நேற்று இரவு நடைபெற்றது. அதேநேரம், நாடளாவிய ரீதியிலுள்ள தேவாலயங்களில் நேற்று இரவு விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன், இன்றும் வழிபாடுகள் நடைபெறவுள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையில் இந்தியா ஆயுதங்களை களஞ்சியப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?- ஹிருணிகா

  • April 20, 2025
  • 0 Comments

இந்தியாவில் அவசர யுத்த நிலைமை ஏற்படும் பட்சத்தில் இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும். எனவே இதன் உண்மை தன்மை தொடர்பில் அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். கடுவலையில் வெள்ளிக்கிழமை (18-04) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப்பிரதிநிதியான தயான் ஜயதிலக […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கருணா, பிள்ளையான் கொல்லப்படும் நானே புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியடையும் நாளாகும். – ராஜித சேனாரத்ன

  • April 20, 2025
  • 0 Comments

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமெனில் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் தண்டிக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் அரங்கேற்றியிருக்கும் நாடகமே பிள்ளையானின் கைதாகும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். களுத்துறை பிரதேசத்தில் சனிக்கிழமை (19-04) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் வெளியேறியதால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்ச்சியடைந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் எந்தவொரு […]

உள்ளூர்

நிகழ்நிலை காப்பு சட்ட மாற்றீடு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

  • April 18, 2025
  • 0 Comments

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நிகழ்நிலை காப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பான ஏதேனும் விதிமுறைகள் நடைமுறையிலிருந்தால், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அந்த விதிமுறைகள் அனைத்தும் ரத்தாகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் தனிநபர் சட்டமூலமாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உள்ளூர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

  • April 17, 2025
  • 0 Comments

24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புகள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக 22ஆம், 23ஆம் திகதிகளில் அஞ்சல் மூல வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தீர்ப்பின் நிமித்தம், அந்தத் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்ட மேலதிக நாட்களான 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

உள்ளூர்

ஈஸ்ட்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியும் அதற்கு உதவியவர்களையும் வெளிப்படுத்துமாறு கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள்

  • April 17, 2025
  • 0 Comments

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் மற்றும் அந்த கொடுரமான செயலிற்கு உதவியவர்கள் யார் என்பதை கண்டறிவது அவசரமான விடயம் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குறித்த தனது விசேட செய்தியில் கத்தோலிக்க ஆயர் பேரவை இதனை தெரிவித்துள்ளது. 2025ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்களாகின்றது என தெரிவித்துள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சுயாதீனமான பக்கச்சார்பற்ற விசாரணைகளை உறுதிசெய்வதற்காக […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில அரசாங்கம் பொய்யுரைக்கின்றது- உதய கம்மன்பில

  • April 16, 2025
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கடத்தல் தொடர்பிலேயே தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார், அரசாங்கம் தெரிவிப்பது போல உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் தடுத்துவைக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையானை தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார் நபர் ஒருவரை கடத்த உதவியது தொடர்பானதே இந்த குற்றச்சாட்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்புகாவல் உத்தரவு எந்த வகையிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் […]