உள்ளூர் முக்கிய செய்திகள்

இன்று (14-09-2025) பல மாகாணங்களில் மழை பெய்யும்

  • September 14, 2025
  • 0 Comments

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, சபரகமுவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் இடியுடன் கூடிய மழை அல்லது இடியுடன் கூடிய மழைப்பொழிவுகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கெஹேலிய ரம்புக்வெல்லாவின் புத்தா 270 கோடி சொத்தை மறைத்ததாக வழக்கு தாக்கல்

  • September 14, 2025
  • 0 Comments

ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னாள் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லாவின் மகன் ரமித் ரம்புக்வெல்லாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை கொழும்பு உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளது. ரமித் ரம்புக்வெல்லா 270 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட சொத்துக்களின் மூலத்தை வெளிப்படுத்தாத குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். அந்த காலகட்டத்தில் அவர் தந்தையின் தனிச்செயலாளராகவும் பணியாற்றியிருந்தார். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக செல்வத்தை குவித்ததாக ஊழல் தடுப்பு ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது

உள்ளூர்

செப்டம்பர் 16ஆம் திகதிக்கு முன் தீர்வின்றேல் தொழிற்சங்க நடவடிக்கையென மின்சார சபை தொழில்சங்கங்கள் எச்செரிக்கை

  • September 14, 2025
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும், நீடித்து வரும் ‘வேலையின்படி வேலை’ போராட்டத்தை இரண்டாம் கட்டத்திற்கு உயர்த்த முடிவு செய்துள்ளன. இக்கட்ட நடவடிக்கை செப்டம்பர் 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, முக்கிய பணியாளர் நியமனங்கள் மற்றும் மறுசீரமைப்புச் சிக்கல்கள் குறித்து பல வாரங்களாக மௌனமாக இருந்து வருவதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சபை பொறியியலாளர் சங்கத் தலைவர் தனுஷ்க பரக்ரமசிங்க ஊடகங்களிடம் பேசியபோது, ‘அரசாங்கத்திலிருந்தும், அமைச்சரிடமிருந்தும், செயலாளரிடமிருந்தும் எந்த பதிலும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தன்னிச்சையான நடவடிக்கையால் மக்கள் சுமையை ஏற்கிறார்கள்- CEB

  • September 14, 2025
  • 0 Comments

எதிர்த்து நிறுத்தியிருப்பது எரிபொருள் விநியோகத் தொடர்ச்சிக்கு ஆபத்தாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இலங்கை மின்சார சபை போட்டி முறையிலான எரிபொருள் கொள்முதல் செயல்முறையை அறிமுகப்படுத்த முயன்றபோது, அதனை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்த்து நிறுத்தியிருப்பது எரிபொருள் விநியோகத் தொடர்ச்சிக்கு ஆபத்தாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மின்சாரம் குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படுவதை உறுதிசெய்து, அரச நிதியை பாதுகாக்கவும், தேசிய ஆற்றல் கொள்கை மற்றும் நிர்வாக தரநிலைகளுடன் இணங்கவும், உடனடியாக போட்டி அடிப்படையிலான எரிபொருள் கொள்முதல் முறையை ஆரம்பிக்க வேண்டும் என […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கை மத்திய வங்கி பங்குதாரர்களின் 2025 ஆம் ஆண்டின் அரையாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது

  • September 13, 2025
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி 2025 ஆம் ஆண்டின் அரையாண்டிற்கான ளுலளவநஅiஉ சுளைம ளுரசஎநல ன் நிதியறிக்கையின் முக்கிய முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, நிதி சந்தை பங்கேற்பாளர்கள் கொண்டிருக்கும் நிதி அமைப்பின் மீதான நம்பிக்கை, அவர்கள் கருதும் அபாய மூலாதாரங்கள் மற்றும் அவற்றின் நிகழ்த்தகூடிய சாத்தியக்கூறுகளை சுருக்கமாக வழங்குகிறது. வெளியிடப்பட்ட முடிவுகள் பங்கேற்பாளர்களின் கருத்துக்களை மட்டுமே பிரதிபலிக்கின்றன் அவை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டாக கருதப்படமாட்டாது எனவும் விளக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு, இலங்கை நிதி அமைப்பின் மீதான […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிரதமருக்கும பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை

  • September 13, 2025
  • 0 Comments

பிரதமர் ஹரிணி அமரசூரிய பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் சந்திப்பு நடத்தினார். இந்நிகழ்வில் சம்பளக் குறைப்புகள், கொடுப்பனவுகள், கூடுதல் நேர ஊதியம், பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் தமது கவலைகளை வெளிப்படுத்தினர். இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் மேலும் விவாதங்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனா 2026 பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை இலவசமாக வழங்க ஒப்புதல்

  • September 13, 2025
  • 0 Comments

சீனா 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை இலவசமாக வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் அரசின் உதவியுடன் இயங்கும் பாடசாலைகளில் கல்வி கற்கும் 44 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடையவுள்ளனர். இந்த ஒப்பந்தம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கல்வி அமைச்சு அதிகாரிகளும், இலங்கைக்கான சீன தூதரரும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியேறுகின்றார்

  • September 11, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் நீக்கும் சட்டத்தின் அடிப்படையில், ஏற்கனவே மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன தமது உத்தியோகபூர்வ இல்லங்களைவிட்டு வெளியேறியிருந்தனர். அதேபோல், சந்திரிக்காவும் விரைவில் தனது உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேற உள்ளார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டைக்கு துரத்தப்பட்டார் மகிந்த ராஜபக்ஸ

  • September 11, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது தந்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பு விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் தனது சொந்த ஊரான தங்காலைக்குத் திரும்பியுள்ளதாக நாமல் கூறினார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பு உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியிருந்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் நாமல் ராஜபக்ச வெளியிட்ட […]

உள்ளூர்

இலங்கை மாகாணசபை முறைமையை முற்றாக நடைமுறைப்படுத்தவேண்டுமென ஐநாவில் தெரிவிப்பு

  • September 11, 2025
  • 0 Comments

இந்தியா, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் 60வது அமர்வின் தொடக்க நாளான திங்கட்கிழமை (08-09) தனது நீண்டகால கோரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி, இலங்கையில் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு கோரியுள்ளது. இந்த 13ஆம் திருத்தம், இந்தியா-இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில், 1987 ஆம் ஆண்டு நியூடெல்லியின் கீழ் இலங்கையில் செயல்படுத்தப்பட்டது. இலங்கை, இதுவரை 13ஆம் திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை முழுமையாக அமல்படுத்தவில்லையென குறிப்பிடப்பட்டது. ஜெனீவாவில் இந்தியா நிரந்தர வதிவிட பிரதிநிதி அனுபமா சிங் […]