உள்ளூர்

மட்டக்களப்பில் 1990 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இன்று நினைவேந்தப்பட்டனர்

  • August 24, 2025
  • 0 Comments

1990ஆம் ஆண்டு சித்தாண்டி பகுதியில் நடைபெற்ற சுற்றிவளைப்பின்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தை நினைவுகூரும் நிகழ்வு இன்று சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமி கோவில் முன்றலில் இடம்பெற்றது. இந்த நினைவேந்தலை சித்தாண்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி அ.அ. அமலநாயகி, சட்டத்தரணி த. ஜெயசிங்கம், பிரதேச சபை உறுப்பினர் சி. வவானந்தன், சித்தாண்டி, முறக்கொட்டசேனை, சந்திவெளி பகுதிகளிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், […]

உள்ளூர்

சுமந்திரன் யாழில் இருந்து பேசுகிறாரா அல்லது ரணில் வீட்டிருந்து பேசுகிறாரா என பிமல் ரத்நாயக்க கேள்வி

  • August 24, 2025
  • 0 Comments

ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் தெரிவித்திருப்பது கவலைக்கிடமானது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், ‘சுமந்திரன் யாழிலிருந்தே பேசுகிறாரா, இல்லை ரணிலின் இல்லத்திலிருந்தே பேசுகிறாரா?’ என்று கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறியதாவது: ‘கறுப்பு ஜூலை கலவரம், நூலகம் எரிப்பு, படுகொலைகள் உள்ளிட்ட பல சம்பவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்க வேண்டும். அதோடு, மத்திய […]

கட்டுரை முக்கிய செய்திகள்

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜா உரிமை பறிப்பு

  • August 23, 2025
  • 0 Comments

1977-க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த யூ.என்.பி அரசு, விசேஷத் தலைவர் ஆணைக்குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் பிரதமர் சிறிமாவோவின் அரசியல் மற்றும் பொது உரிமைகளை ஏழு ஆண்டுகளுக்கு நிறுத்தியது. நீதியின் பெயரில் அரசியல் தண்டனைதானா? இல்லையா அதிகார துஷ்பிரயோகமா என்ற விவாதம் இன்றும் தொடர்கின்றது 1980 அக்டோபர் 16 அன்றைய நாள் இலங்கை அரசியல் வரலாற்றில் விவாதம் குன்றாத நாளாகவே நினைவுகூரப்படுகின்றது. அந்த நாள்தான், முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு ‘உiஎiஉ னளையடிடைவைல’—அதாவது பிரஜாஃஅரசியல் உரிமை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ரணிலுக்கு பிணை வழங்காமைக்கு குமுருகிறார் சுமந்திரன்

  • August 23, 2025
  • 0 Comments

பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன் யாரும் மேலானவர்கள் அல்ல என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவை வெள்ளிக்கிழமை கைது செய்த பின்பு, அவருக்கு பிணை வழங்குவதை எதிர்த்தது முறையான ஆலோசனை அற்ற செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு […]

உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

  • August 23, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள லண்டன் பயணம் மேற்கொள்வதற்காக அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சாட்டிய குற்றச்சாட்டின் பேரில், நேற்று (22-08) அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. […]

உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

  • August 23, 2025
  • 0 Comments

கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார். 2023 செப்டம்பரில், ஹவானாவில் நடைபெற்ற பு77 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின் லண்டன் பயணத்தில் அவர் தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றதாகவும், அப்பயணத்தில் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நேற்று காலை […]

உள்ளூர்

பிரசரும் சுகரும் கூடியதையடுத்து ரணில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

  • August 23, 2025
  • 0 Comments

சிறை காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர்

ரணிலின் பிணைக் கோரிக்கை ஒத்திவைப்பு

  • August 22, 2025
  • 0 Comments

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணைக் கோரிக்கை தொடர்பான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரை மணித்தியாலயத்திற்கு குறித்த உத்தரவு தொடர்பான அறிவிப்பை ஒத்திவைப்பதாக கொழும்பு கோட்டை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு குற்றப் புலனாய்வுத் துறை அழைப்பு விடுத்துள்ளது

  • August 20, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அரசாங்க நிதி தனியார் வெளிநாட்டு பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த வெளிநாட்டு பயணம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பயணத்தில் முன்னாள் ஜனாதிபதியுடன் 10 பேர் இணைந்து சென்றிருந்தனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதே விடயம் தொடர்பில் முன்னாள் […]

உள்ளூர்

கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் காயம்

  • August 19, 2025
  • 0 Comments

பேலியகொடை ஞானரத்ன மாவத்தையில் இன்று  துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பேலிகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரே காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் காயம் பேலியகொடை ஞானரத்ன மாவத்தையில் இன்று  துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் […]