வடகிழக்கு ஹர்த்தால் மன்னாரில் 50 வீத வெற்றி
வடக்கு – கிழக்கில் தழுவிய ஹர்த்தால் இன்று (18-08) முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மன்னார் மாவட்டத்தில் பெரும்பாலான வணிக நிலையங்கள் மூடப்பட்டன. பஜார் பகுதியில் சில உணவகங்கள் மற்றும் வணிக நிலையங்கள் இயங்கினாலும், பல கடைகள் கதவடைப்பில் ஈடுபட்டன. வடக்கில் அதிகரித்திருக்கும் இராணுவப் பிரசன்னத்திற்கும் குற்றச்செயல்களுக்கும் எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் ஆதரவு கிடைத்திருந்தாலும், அதற்கு […]