உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகள் 6 பேரூம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

  • August 12, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் உரிமைகளை ரத்து செய்யும் அரசாங்கத்தின் புதிய சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ரேணுகா பெரேரா தாக்கல் செய்துள்ளார். இதில், சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார். மனுதாரர் தனது மனுவில், கடந்த 7ஆம் திகதி அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இணைத்ததாகவும், அதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் சட்டரீதியாக ரத்து செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், முன்மொழியப்பட்ட […]

உள்ளூர்

யாழ் கொடிகாமத்தில் ஏ9 வீதியில் டிப்பர், லொரி, கார்…. விபத்து ஒருவர் பலி, பலர் காயம்

  • August 11, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம்–கண்டி ஏ9 வீதியில், கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு (10-08) இடம்பெற்ற பல வாகன மோதல் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஒருவர் அமர்ந்திருந்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதியது. உயிரிழந்தவர் மிருசுவில் கரம்பஹம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளைத் தவிர்க்க டிப்பர் வாகன சாரதி பிரேக் போட்டபோது, அதே திசையில் வந்த […]

உள்ளூர்

யாழ் நெடுந்தீவில் கத்திக்குத்து ஒருவர் பலி, நால்வர் படுகாயம்’

  • August 11, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 40 வயதுடைய அற்புதராசா அகிலன் என்பவர் மீது பலமுறை கத்திக்குத்து நடத்தப்பட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலாளியை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உட்பட நால்வருக்கும் கத்திக்குத்து காயம் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களும் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் மேற்கொண்ட நபர் சம்பவத்திற்குப் […]

உள்ளூர்

இலங்கையின் முதலாவது பணக்காரனாக இஸாரா நாணயக்கார முதலிடத்தைப் பிடித்துள்ளார்

  • August 10, 2025
  • 0 Comments

கல்ஃப் நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் இஸாரா நாணயக்கார இலங்கையின் முதல்நிலை செல்வந்தராகத் திகழ்கிறார். இதன் மூலம், அவர் தம்மிக்க பெரேராவை முந்தி நாட்டின் பணக்கார பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். கல்ஃப் நியூஸ் வெளியிட்ட தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலில், இந்திய தொழிலதிபர் முகேஸ் அம்பானி 118 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் பிராந்தியத்தின் மிகப்பெரிய செல்வந்தராக இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தானின் ஸாஹித் கான் 13.5 பில்லியன், […]

உள்ளூர்

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காணுமாறு கோரிக்கை

  • August 10, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்கள் உதவுமாறு, காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர், சட்டத்தரணி கலாநிதி தற்பரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் நடைபெற்று வரும் வழக்கு இலக்கம் யுசுஃ804ஃ23-இன் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட தொல்பொருள் ஆய்வுகளின் அடிப்படையில், இந்த புதைகுழி 1994 முதல் 1996 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. காணாமல் போனோர் அலுவலகம், 2016ஆம் ஆண்டின் […]

உள்ளூர்

திருமலையில் வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் 100 நாள் செயன்முனைவின் 10ஆம் நாள் போராட்டம் நடைப்பெற்றது

  • August 10, 2025
  • 0 Comments

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஸ்டி அரசியல் தீர்வை வலியுறுத்தி, திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேசத்தின் திரியாய் கிராமத்தில் இன்று மக்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வு, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயன்முனைவின் 10ஆம் நாளாகும். போர் பாதிப்புகளால் நீண்டகாலமாக சிக்கலில் உள்ள திரியாய் மக்கள், இன்றும் நில அபகரிப்பு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனை எதிர்த்து, திரியாய் மக்களும், பல்வேறு இடங்களில் இருந்து வந்த […]

உள்ளூர்

புத்தளம் மீன்வாடியில் 100 கோடி பெறுமதியான மருந்து வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன

  • August 8, 2025
  • 0 Comments

கற்பிட்டி கண்டக்குழி குடா கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்வாடிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூறு கோடிக்கு மேற்பட்ட பெறுமதி வாய்ந்த சட்டவிரோத மருந்து வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமாக இருந்த மீன்வாடிக்குள் வைத்திருந்த பொதிகளை பொலிஸார் சோதனை செய்தனர். அதன் போது புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கு உபயோகப்படும் மருந்து வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறான மருந்துகள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட 43 பொருட்களை மக்கள் பார்வையிட்டனர்

  • August 6, 2025
  • 0 Comments

இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக அறிவிக்கப்பட்ட வளாகத்திலேயே பொதுமக்கள் பார்வைக்கு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 54 பிற பொருட்களில் 43 பொருட்கள் 2025 ஆகஸ்ட் 5 பிற்பகல் பொதுமக்களுக்கு, குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமையுடன் காட்டப்பட்டன. இருநூறுக்கும் மேற்பட்ட போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இதில் பங்கேற்றும், 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடிய தங்கள் உறவினர்களின் எந்தப் பொருளையும் அடையாளம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ், முஸ்லிம் சமூகங்களின் முரண்களை இரு சமூக தலைவர்களும் தீர்க்கமுடியும்- ரிஸாட் பதியுதீன் எம்.பி.

  • August 6, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா முன்வைத்த ஓட்டமாவடி எல்லைப் பிரச்சினையை தீர்க்கும் தொடர்பான பிரேரணை குறித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்தாலும், அவற்றுக்கு தீர்வு கிடைப்பதில்லை எனவும், எந்த அரசாங்கமாக இருந்தாலும் இவ்விடயங்களைத் தீர்க்கும் முயற்சியை விட, அவற்றை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தும் நோக்கம் அதிகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த அனுபவங்கள் இதை தெளிவாக காட்டுகின்றன என்றும் கூறினார். ஓட்டமாவடி பிரதேச சபையை தமது கட்சியே வென்றிருந்த போதும், ஆட்சி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மகிந்தவின் பெறாமகன் சஸிந்திர ராஜபக்ச விளக்கமறியல்

  • August 6, 2025
  • 0 Comments

இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று (06) காலை சஷிந்திர ராஜபக்சவை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.