உள்ளூர் முக்கிய செய்திகள்

வீட்டு உணவுண்ண எனக்கு அனுமதியளிக்கவில்லை சிறைச்சாலை உணவையே உண்டேன் – கலகொட அத்தே ஞானசார தேரர்

  • February 27, 2025
  • 0 Comments

சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் கூட, தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அரசின் பாதீட்டிற்கு எதிராக நாடு முழுவதும் தாதியர்கள் போராட்டம்

  • February 27, 2025
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் தாதியர் சேவையிலுள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். வரவு – செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில், பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று மதிய உணவுவேளை, நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர் […]

உள்ளூர்

சிங்கள மாவட்டங்களையும் தமிழ் மாவட்டங்களையும் வரவு – செலவுத் திட்டத்தில் அரசு வேறுபடுத்தியிருக்கின்றது- – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • February 26, 2025
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பல அடிப்படை பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இருப்பினும் வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான தீர்வுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. எம் மக்களுக்கு முரண்பாடற்ற தீர்வு கிடைக்கும் வரையில் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதை தவிர வேறு எந்த தெரிவுகளும் தமக்கு கிடையாது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் தமிழர் பிரதேசங்களில் ஆக்கிரமிப்புக்கள் இன்றும் தொடர்கின்றன என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் தொடர்புண்டென உதய கம்மன்பில குற்றசாசாட்டு

  • February 24, 2025
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் தொடர்பிருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே தகவல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி பதில் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரவி செனவிரத்ன நடவடிக்கை எடுப்பாரா என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பினார். பிவிதுரு ஹெல உருமய அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் மேலும் குறிப்பிடுகையில், கணேமுல்ல சஞ்சீவ மீது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில் விபத்து காரும் மோட்டார் சைக்கிளும் தீயில் எரிந்து நாசம்

  • February 24, 2025
  • 0 Comments

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரும் மோட்டார் சைக்கிளும் முற்றாக தீப்பற்றி எறிந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் திங்கட்கிழமை வவுனியா – பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்ற காரும், பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய நிலையில் விபத்துக்குள்ளாகி இருக்கின்றது. இதனை அடுத்து இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தொடரூந்து மீது 13 வயது சிறுவர்கள் கல் வீச்சு தாக்குதல் நடாத்தியதால் கைது!

  • February 23, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில், தொடரூந்து; மீது தெடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதலை நடாத்தி வந்த மூவர் நேற்று (22-02-2025) கைது செய்யப்பட்டனர். யாழ். மாவட்ட பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்கவின் கட்டளைக்கிணங்க, மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கு அமைய மூன்று பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் தேவி நேற்றுமுன்தினம் யாழ் நேக்கி வரும்பொழுது குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. தொடரூந்து வரும்போது அரியாலை பகுதியில் வைத்து கல் எறிவதை தொடரூந்தில் சென்ற […]

இலங்கை படையினருக்கும் பாதாள உலக குழுக்களுடன் தொடர்புண்டு என பாதுகாப்பு செயலாளர் ஒப்புதல்

  • February 22, 2025
  • 0 Comments

சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்றுள்ள ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்தகைய நபர்களைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். ஆயுதப் பயிற்சி பெற்று இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை மிகக் குறுகிய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

காட்டிக்கொடுத்தால் 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படுமென பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளார்

  • February 22, 2025
  • 0 Comments

நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற 58 குழுக்களும், அவற்றைப் பின்பற்றுகின்ற 1400 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். சமூகத்தில் ஆயுத புலக்கம் அதிகரித்துள்ளதால் அவற்றால் இடம்பெறக் கூடிய குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ரி- 56 ரக துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழீழ விடுதலை புலிகள் உட்பட 15 அமைப்புகளுக்கு தடை விதித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

  • February 22, 2025
  • 0 Comments

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தொழிற்படுகின்ற தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குழுக்களிடமிருந்து பெறப்படுகின்ற உதவியுடன் அந்த அமைப்பை மீள் உருவாக்குவதற்கான எத்தனிப்புகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்த குற்றச்சாட்டில் […]

முக்கிய செய்திகள்

மலையக்திற்கு ஒதுக்கியது போன்று யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் அதின நிதியை அரசாங்கம் ஒதுக்க வேண்டுமென மஸ்தான் எம்.பி கோரிக்கை

  • February 19, 2025
  • 0 Comments

அதற்கான முறையான செயற்றிட்டத்தை அரசாங்கம் அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (18-02-2025 ) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் அரசாங்கம் முன்வைத்திருக்கும் வரவு – செலவு திட்டம் மக்களை ஓரளவேனும் வாழவைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவே காண்கிறோம். குறிப்பாக மலையக […]