முக்கிய செய்திகள்

முன்னைய ஆட்சியில் 3 நாட்கள் மீடி பிடித்த தமிழக மீனவர்கள் எமது ஆட்சியில் 7 நாளும் மீன் பிடிக்கின்றார்கள்- அமைச்சர் சந்திரசேகர்

  • February 13, 2025
  • 0 Comments

இலங்கையின் கடல் வளத்தை அழிதொழிக்கும் நடவடிக்கையில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தமிழக மீனவர்கள் அத்துமீறும் செயற்பாடு தொடர்பில் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தமிழக மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் மூன்று […]

முக்கிய செய்திகள்

இலங்கையை டிஜிட்டல் பொருளாதார மயமாக்குமாறு ஒரகல் நிறுவனத்திடம் ஜனாதிபதி வேண்டுகோள்

  • February 13, 2025
  • 0 Comments

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற உலக அரச உச்சி மாநாட்டின் (றுபுளு) பின்னர், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (11-02-2025 ) ஒரக்கல் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பொருளாதாரம் மற்றும் நிர்வாகச் செயற்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கையின் டிஜிட்டல் மாற்றம், பின்டெக் சேவை மற்றும் கிளவுட் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திகொள்ளல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்க ஒரகல் கிளவுட் உட்கட்டமைப்பு (ழுஊஐ) வழங்க […]

முக்கிய செய்திகள்

சிறுவர் துஸ்பிரயோக வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய புதிய வேலைத்திட்டம்- நீதியமைச்சர்

  • February 12, 2025
  • 0 Comments

சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஸன நாணயக்கார தெரிவித்தார். துஸ்பிரயோகம் இடம்பெற்ற தினத்திலிருந்து வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு சுமார் 05 வருடங்கள் செல்வதாக அவர் குறிப்பிட்டார். காலம் தாழ்த்தி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சாட்சி வழங்கப்படும் போது பாதிக்கப்பட்ட சிறுவர்களினால் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுமெனவும் அவ்வாறு இடம்பெறும் போது குற்றவாளிகள் தப்பிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் நீதியமைச்சர் […]

முக்கிய செய்திகள்

அர்ச்சுனா எம்பியின் பதில் தாக்குதலில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி!

  • February 12, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தன் மீது தாக்குதல் நடாத்தினார் என கூறி நபர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ். நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றில் உணவருந்த சென்ற வேளை அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடன் வலிந்து வாக்குவாதப்பட்டதுடன் அர்ச்சுனா மீது தாக்குதல் நடத்தியுள்ளார் இதில் தற்பாதுகாப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதில் தாக்குதல் தாக்கியதில் காயமடைந்தவரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரியவருகின்றது […]

முக்கிய செய்திகள்

யாழ் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கெதிரான போராட்டம் இன்றும் தொடர்கின்றது

  • February 12, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் புதன்கிழமை (12) தொடர்கிறது. காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். ‘பௌத்தம் உன் மதம் வழிபடு தையிட்டி என் மண் வழிவிடு’, ‘சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை உடனடியாக அகற்று’, ‘கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிறுத்து’ போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு […]

முக்கிய செய்திகள்

நாளை மின்வெட்டு நடைபெறாதென இலங்கை மின்சார சபை அறிவிப்பு

  • February 11, 2025
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பெப்ரவரி பௌர்ணமியை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08-02-2025) ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்த மூன்று மின்னுற்பத்தி இயந்திரங்களையும் மீண்டும் மின்னுற்பத்தி கட்டமைப்பில் இணைப்பதற்கு பல பகுதிகளில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சாரசபை தீர்மானித்திருந்தது. அதன்படி, நாட்டில் பல பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (10-02-2025) […]

முக்கிய செய்திகள்

தையிட்டி விகாரை காணிக்கான மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லையென பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் திட்டவட்டம்

  • February 8, 2025
  • 0 Comments

  மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை – பூர்வீக நிலத்தின் உரிமையாளர்களாகிய நாம் உரிமங்களுடன் இருக்க தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி நிலங்களும் விகாரைக்குரியதென்று கூறுவதை ஏற்க முடியாது என கூறியுள்ள தையிட்டி காணி உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் பௌர்ணமி நாளன்று போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை (08) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்த குறித்த காணி நிலங்களின் உரிமையாளர்கள் இவ்வாறு […]

புதியவை முக்கிய செய்திகள்

வவுனியாவில் ஓட்டோவின் அலங்கார பாகங்களுக்கு தண்டப்பணம் விதித்த பொலிசார் கோவமடைந்த சாரதி செய்த செயல்

  • February 8, 2025
  • 0 Comments

வவுனியாவில் க்ளீன் சிறிலங்கா திட்டத்தில் முச்சக்கர வண்டி சாரதிக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த முச்சக்கரவண்டி சாரதி தனது வாகனத்தின் மேலதிக பாகங்களை தனது காலால் உதைந்து உடைத்து எறிந்த சம்பவம் ஒன்று வவுனியாவில் நேற்று (07-02-2025) இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் ஓர் அங்கமாக முச்சக்கரவண்டி, பேரூந்து உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு பொலிஸார் தெரித்துள்ளதுடன், அவற்றினை அகற்றுவதற்கு கால அவகாசமும் வழங்கியிருந்தனர். அந்தவகையில் வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் கிளீன் […]

முக்கிய செய்திகள்

பிள்ளையானே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு திட்டமிட்டதாக அவரின் செயலாளர் ஆசாத் மௌலானா தெரிவிப்பு

  • February 6, 2025
  • 0 Comments

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் குறித்து அவரது செயலாளர்களில் ஒருவரான ஆசாத் மௌலானா சனல் 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சிறைத்தண்டனையை அனுபவித்தவேளை பிள்ளையான் சிறையிலிருந்தவாறே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான திட்டமிடலில் ஈடுபட்டார் என ஆசாத் மௌலானா சனல் 4க்கு தெரிவித்தார் என […]

முக்கிய செய்திகள்

அமெரிக்க வீசா தொர்பில் அமெரிக்க தூதரகத்தின் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது

  • February 6, 2025
  • 0 Comments

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது வீசா விண்ணப்பங்களை கண்காணிப்பதை இயலுமாக்குவதை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும், பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல், வீசா தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் பெற்றுக்கொள்ளல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் ஏகுளு கூரியர் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்பு அமெரிக்கத் தூதரகத்தில் நேரடியாக ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ முடியாது. தாமதங்களைத் […]