முக்கிய செய்திகள்

அர்ச்சுனாவை விசர் என தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

  • February 5, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு உளவியல் பிரச்சினை உள்ளது. ஆகவே அவரை மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை மீறல் பிரச்சினை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்ட ஒருசில விடயங்களை சுட்டிக்காட்டி ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து, உரையாற்றிய போது மேற்கண்டவாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார். அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற உறுப்பினரானவின் செயற்பாடுகள் தொடர்பில் எங்களுக்கு பிரச்சினைகள் […]

முக்கிய செய்திகள்

இலங்கையின் சுதந்திர தினத்தன்று போராட்டத்தில் குதித்த பிரித்தானிய வாழ் தமிழர்கள்!

  • February 5, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக அந்நாட்டில் வசிக்கும் தமிழ் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டமானது நேற்றைய தினம் (04.02.2025) பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் கீழ் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அத்தோடு, பிரித்தானியாவின் இலங்கை தூதரகத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் கொடியும் ஏற்றப்பட்டுள்ளது. இதன்போது, ‘தமிழ் ஈழமே எமது நாடு’, ‘தமிழ் ஈழம் ஒன்றே […]

முக்கிய செய்திகள்

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்திய யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பிரகடனம் வாசிக்கப்பட்டது

  • February 4, 2025
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக அனுஷ்டித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று  பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, பிரகடனமும் வாசிக்கப்பட்டது. அந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே, தமிழர் எமக்கு சுதந்திர நாள்! ஈழத் தமிழர்களாகிய நாம் மரபு வழி தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்கு பிரகடனப்படுத்துகிறோம். வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்பு கோட்பாடு, பொங்கு தமிழ் […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் நீதிமன்ற உத்தரவை கூட வனவள திணைக்களம் நடைமுறைப்படுத்தவில்லையென ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு

  • February 4, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு – மாந்தைகிழக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட துவரங்குளம் மற்றும், அக்குளத்தின் கீழான வயல் நிலங்களையும் மக்களிடம் கையளிக்கும் விடயத்தில் நீதிமன்றம் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு பிரதேச செயலகமும், வனவளத் திணைக்களமும் தமக்கிடையிலான பிணக்குகளைத் தீர்த்து மக்களுக்குரிய குறித்த குளத்தையும் குளத்தின் கீழான வயல் நிலங்களையும் அவர்களிடமே கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தியுள்ளார். மாந்தைகிழக்குப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் திங்கட்கிழமை (03-02-2025) இடம்பெற்ற […]

முக்கிய செய்திகள்

மாவை சேனாதிராஜா அக்கினியுடன் ஐக்கியமானார்

  • February 2, 2025
  • 0 Comments

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல், இன்று ஞாயிற்றுக்கிழமை (02) தகனம் செய்யப்பட்டது. மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது புகழுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாவிட்டபுரம் தச்சன்காடு இந்துமயானத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வில் அரசியல்வாதிகள், பொது அமைப்பினர், மத குருமார்கள், சிவில் சமூக செயற்பமாவை சேனாதிராஜா அக்கினியுடன் ஐக்கியமானார் மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல்இ இன்று ஞாயிற்றுக்கிழமை […]

முக்கிய செய்திகள்

மாவை சேனாதிராஜா என்ற நீண்ட சரித்திரம் சரிந்தது

  • January 31, 2025
  • 0 Comments

மாவை சேனாதிராசா 1942 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ம் திகதி யாழ்ப்பாணத்தில் மாவிட்டபுரத்தில் பிறந்தார். மாவையண்ண மாவை மாவை சேனாதிராஜா என அவர் அழைக்கப்பட்டாலும் அவரின் இயற் பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா என்பதாகும் ஆகும் இவர் யாழ்ப்பாணத்தில் வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மாவை சேனாதிராஜா 1961 ம் ஆண்டு நமைப்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றி […]

முக்கிய செய்திகள்

கொள்கலன்கள் விடுவிப்பில் மோசடி இடம்பெறவில்லையென்கிறார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

  • January 31, 2025
  • 0 Comments

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களும் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்கள் உரிய சாட்சியங்களுடன் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய வேண்டுமே தவிர குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில் பயனில்லையென்கிறார் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களும் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் சுங்கத்திணைக்களமும் தெளிவுப்படுத்தியுள்ளது. சுங்கத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் […]

முக்கிய செய்திகள்

ஊழல் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதியென்கிறார் அமைச்சர் வசந்த சமரசிங்க

  • January 31, 2025
  • 0 Comments

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஊழல்வாதிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் முன் நிறுத்தப்படுவார்கள் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அநுராதபுரத்தில் நேற்று (30-01-2025 ) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் […]

முக்கிய செய்திகள்

மாவையின கனவை அரசு தமிழ் மக்களுக்காக நிறைவேற்றும் – அமைச்சர் சந்திரசேகர்

  • January 30, 2025
  • 0 Comments

அறவழி போராட்டம், சிறைவாசம் என தனது ஐந்து தசாப்தகால அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பிவந்த மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, ‘இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான, யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மறைவு செய்தி […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் விபத்து குடும்பஸ்தர் உயிரிழந்தார்

  • January 30, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் காலபோக அறுவடை செய்து நெல் ஏற்றிவந்த உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தினையடுத்து உழவி இயந்திரத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.