முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு அரசியல், சமூக செயற்பாட்டாளரான பீற்றர் இளஞ்செழியனை பயங்கரவாத விசாரணை பிரிவு அழைப்பு

  • January 29, 2025
  • 0 Comments

முல்லைத்தீவில் வசித்துவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான பீற்றர் இளஞ்செழியனை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (29) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு – மணல் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் பீற்றர் இளஞ்செழியனை எதிர்வரும் 01.02.2025 அன்று அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்திருக்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவுக்கு சமுகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக 01.02.2025ஆம் திகதி […]

முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவை எழிற்சியூட்டுகிறார்

  • January 29, 2025
  • 0 Comments

கடந்த கால கசப்புக்களை மறந்து மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் (சிலிண்டர்) உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (27) கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் […]

முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைகழக விரிவுரிரையாளர்களை பணிக்கு திரும்புமாறு அரசாங்கம் கோரிக்கை

  • January 29, 2025
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் எழுந்துள்ள முரண்பாடுகள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அது கிடைத்த பின் கல்வி அமைச்சு விரைவில் இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வினைகளை முடிவுக்கு கொண்டவரும் எனவும் ஆகவே அதுவரை வேலை நிறுத்தங்களில் ஈடுபடாது கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் தூக்கிலிட்டு நாயை கொன்ற பெண் கைது

  • January 27, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியில் நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த சனிக்கிழமை (25-01-2025) நாயொன்று மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. நாய் கொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்ததுடன் அதற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் […]

முக்கிய செய்திகள்

பாடசாலைகள் இன்று ஆரம்பம்

  • January 27, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று (27) ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாவது தவணை மூன்று கட்டங்களாக நடைபெறுவதோடு, முதல் கட்டம் இன்று முதல் மார்ச் 14 வரை நடைபெறும். முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 முதல் 11 வரையிலும், மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 முதல் மே 9 வரையிலும் நடைபெறும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

புலிகளின் மீள செயற்படும் சாத்தியமிருப்பின நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு மஹிந்தவிடம் அரசாங்கம் வலியுறுத்தல்

  • January 26, 2025
  • 0 Comments

மீளப் பெறப்பட்ட தனது பாதுகாப்பு பிரிவை மீள வழங்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த வழக்கு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அரசாங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது மீண்டும் விடுதலைப் புலிகளின் ஒன்று கூடி எழுச்சி பெறுவது தொடர்பான தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி வசம் இருக்குமாயின் அவற்றை நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் […]

முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 2வது நாளாக தொடர்கின்றது

  • January 25, 2025
  • 0 Comments

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது மாணவர்கள் 9 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கடந்த மே மாதம் விஞ்ஞான பீட மாணவர்களின் கற்றல் மண்டபத்தில் மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது மாணவர்களை மண்டபத்தினுள் வைத்து விரிவுரையாளர் ஒருவர் பூட்டிய வேளை விஞ்ஞான பீட மாணவர் […]

முக்கிய செய்திகள்

யாழ் இந்துக் கல்லூரியின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான டெங்கு விழிப்புணர்வு ஆவணப்படம் வெளியிடப்பட்டது

  • January 25, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஒளிப்படக்கலைக் கழகத்தின் தயாரிப்பு மற்றும் ஒளிப்படமாக்கலில் உருவான டெங்கு விழிப்புணர்வு தொடர்பான ஆவணக் குறும்படம் கடந்த திங்கட்கிழமை (20) வெளியிடப்பட்டது. யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரின் ஏற்பாட்டில் யாழ். இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது. யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக […]

முக்கிய செய்திகள்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும்- மாகாணசபைகள், உள்ளுராட்சி மற்றும் பொது நிர்வாக அமைச்சு

  • January 25, 2025
  • 0 Comments

2016ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாணசபை சட்டத்தில் புதிய கலப்பு முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்ற அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். அதனை நடைமுறைப்படுத்துவதற்காக எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், எனினும் அது பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய தற்போதைய சூழ்நிலையில், முந்தைய முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். பழைய முறையின்படி, மாகாணசபைத் தேர்தலை […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

  • January 24, 2025
  • 0 Comments

மாணவர்கள் பழிவாங்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ள மாணவர்கள் அதனை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று தொடக்கம் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டததை ஆரம்பித்துள்ளனர் 4 கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்து போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய் விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய் ⁠மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து […]