உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் தொடர்ச்சியாக அறுக்கப்படும் தொலைத்தொடர்பு வடங்கள்!

  • January 23, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி கரணவாய் பகுதியில் தொடர்ச்சியாக இலங்கை தொலைத்தொடர்பு சேவைக்குரிய வடங்கள்(வயர்கள்) திருடர்களால் அறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் 8 முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரச சொத்தான ஸ்ரீலங்கா ரெலிகொம் இணைப்பு வயர்கள் அறுக்கப்படுவதனால், அப்பகுதியில் தொலைத்தொடர்பு பாதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், அரச சொத்துக்கள் நாசமக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுவதில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத […]

முக்கிய செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டம் நிட்சயம் நீக்கப்படும் – பிரதி அமைச்சர் சுனில் வடகல

  • January 23, 2025
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் என்று ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியதாக பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்துள்ளார் இந்த சட்டத்தை இரத்து செய்வது தொடர்பிலும், மாற்றீடு சட்டம் உருவாக்கம் தொடர்பிலும் ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. உப குழுவின் பரிந்துரைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இச்சட்டத்தின் பாரதூரத்தை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே சட்டத்தை நிச்சயம் இரத்துச் செய்வோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் […]

முக்கிய செய்திகள்

கிளீன் சிறிலங்காவால் நாறுகின்றது பாராளுமன்றம்

  • January 22, 2025
  • 0 Comments

தாஜுதீனையும் லசந்த விக்கிரமதுங்கவையும் கொலை செய்தது நாமல் இராஜபக்ஸ என அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் கிளீன் சிறிலங்கா திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அரசாங்கத்துடன் தர்க்கத்தில் ஈடுபட்டதால் சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் நாமலுக்குமிடையில் இடையில் கடும் தொனிளிலான வாக்குவாதம் நடைப்பபெற்றது பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் நாமல் ராஜபக்ஸ உரையாற்றும்போது தெரிவித்த விடயங்கள் தொடர்பிலே வாக்குவாதம் ஏற்பட்டது. சுபையில் […]

முக்கிய செய்திகள்

திருகோணமலையில் அம்பியூலன்ஸ் விபத்து இரண்டு பேர் காயம்

  • January 21, 2025
  • 0 Comments

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பாலத்தோப்பூர் பகுதியில், அம்பியூலன்ஸ் வண்டியும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. அம்பியூலன்ஸ் அருகில் உள்ள வாய்க்காலினுள் வீழ்ந்துள்ள அதே வேளை அதில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து இனறு; (21) இடம்பெற்றுள்ளது. காயமடைந்த அம்பியூலன்ஸ் வண்டி சாரதி மற்றும் வைத்தியசாலை ஊழியர் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்  

முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு அரச வீடு இல்லை மாதம் 30 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும்- ஜனாதிபதி

  • January 20, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை என்று குறிப்பிட்டோம். எனக்கு வீடு வேண்டாம் என்பதற்கான கடிதத்தை பதவியில் இருக்கும் போதே வழங்குவேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வசிக்கும் பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அரச இல்லத்தை அரசுடமையாக்குவோம். அவருக்கு மாதம் 30 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்படும். வேண்டுமாயின் மாத வாடகை செலுத்தி அவர் அங்கு வசிக்கலாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். களுத்துறை பகுதியில் நேற்று (19) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

  • January 19, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர்; மழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு நவகரி பிரதேசத்தில் 92 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய காத்தான்குடி, காத்தான்குடி, ஆரையம்பதி, வாகரை, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, ஏறாவூர் உட்பட பல பிரதேச செயலக பிரிவுகளில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின இதனால் மக்களின் இயல்பு […]

முக்கிய செய்திகள்

கோட்டாவிடம் சீ.ஐ.டியினர் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர்

  • January 17, 2025
  • 0 Comments

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (ஊஐனு) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ ஒன்றரை மணி நேரம் விசாரணைக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார் கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி இன்று காலை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். இதன்போது, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

இலங்கை பாராளுமன்றத்தில் பாலியல் துன்புறுத்தல், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது

  • January 17, 2025
  • 0 Comments

பாராளுமன்ற பெண் பணியாளருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பாராளுமன்ற பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பல கட்டங்களாக விசாரணைகள் நடத்தப்பட்டு இதன் அடிப்படையில் மூன்று பணியாளர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஸானி ரோஹணதீரவின் பரிந்துரைக்கு அமைய குறித்த மூன்று பணியாளர்களையும் பணிநீக்கம் செய்வதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அண்மையில் ஒப்புதல் வழங்கினார். 2021 மற்றும் 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாராளுமன்ற […]

முக்கிய செய்திகள்

கல்வியில்லாதவர்கள் இரண்டு கண்களும் இல்லாதவர்கள்- வடக்கு மாகாண ஆளுநர்

  • January 17, 2025
  • 0 Comments

கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக அமைந்துவிடக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தேவையுடைய 217 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் சா.சுதர்சன் தலைமையில் நேற்று (16) நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். […]

முக்கிய செய்திகள்

வடக்கு மீனவர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்- முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்

  • January 17, 2025
  • 0 Comments

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி மீனவர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற அயலவர்கள் நிகழ்வில் பங்கேற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பில் முதலமைச்சரிடம் பேசாமை தொடர்பில் அவரிடம் கருத்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் […]