முக்கிய செய்திகள்

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம் ஆண்டு எழுச்சி நாள்!

  • January 17, 2025
  • 0 Comments

பொங்குதமிழ் நிகழ்வானது 17ஆம் திகதி அதாவது இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இன்று (17-01-2025) நண்பகல் 12 மணியளவில் பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபியில் அனைத்து மாணவர்களும் உணர்வுடன் ஒன்று திரண்டு இந்த பொங்குதமிழ் நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளனர்.    

உள்ளூர்

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு கோரி ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம்!

  • January 15, 2025
  • 0 Comments

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு கோரி, பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழுமம் உள்ளிட்ட பல சிவில் சமூக அமைப்புகள் இணைந்து ஜனாதிபதி அனுரகுமாரதிசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன. பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழுமத்துடன் 24 சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளன. அத்துடன் இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறை போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் […]

முக்கிய செய்திகள்

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை விடுதி ஒன்றில் கடத்தியவருடன் தங்கியுள்ளார்

  • January 13, 2025
  • 0 Comments

கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து தரிப்பிடத்தில் பேருந்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

வாகன இறக்குமதியால் மக்களுக்கு பலனில்லை – பொருளியலாளர்கள்!

  • January 12, 2025
  • 0 Comments

எதிர்வரும், பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி கொள்கைகளை அரசாங்கம் அறிவித்திருந்தாலும் அதன் நன்மைகள் வாகன விற்பனையாளர்களால் அநீதியான முறையில் பெற்றுக் கொள்ளப்படும் என பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தநிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த ஐந்து வருடமாக காணப்பட்ட வாகன இறக்குமதிக்கான தடை எதிர்வரும் பெப்ரவரி மாதம் தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தற்போது புதிய வரி கொள்கைகளுக்குக்கு மேலாக வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட […]

முக்கிய செய்திகள்

ஜனாதிபதி சீனாவுடனான புதிய கொள்கைகளுடன் நாளை மறுதினம் சீனா செல்கிறார்

  • January 12, 2025
  • 0 Comments

ஐனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (14) பொங்கல் தினத்தன்று சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உட்பட அரச அதிகாரிகள் இந்த விஜயத்தில் பங்கேற்கின்றனர். அத்துடன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், பிரதமர் லி கியாங், வெளிவிவகார அமைச்சர் வோங் யீ, சீன பதசிய மக்கள் காங்கிரஸின் தற்போதைய நிழலக் குழுவின் தழலவர் ஜாஓ லெர்ஜி மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கனேடிய அமைச்சரை சந்தித்த தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்!

  • January 12, 2025
  • 0 Comments

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் கடந்த 10 ஆம் திகதி மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அம்பாறை பொலிஸ் நிலையமொன்றில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பெண்!

  • January 9, 2025
  • 0 Comments

கல்முனை பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் யுவதி ஒருவர் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டதாக நாடாளுமன்றில் கோடிஸ்வரன், எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார். பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கச் சென்ற பெண் ஒருவரும், அவரது உறவினர்களும் கடுமமையாக தாக்கப்பட்டதாகவும் இந்த விடயம் மிகவும் மோசமான செயல் எனவும் நாடாளுமன்ற அமர்வில் கோடிஸ்வரன், எம்.பி இடித்துரைத்துள்ளார். இந்த அரசாங்கத்தில் தூய்மையான சிறிலங்கா எனும் திட்டங்கள் எல்லாம் நடைமுறைப்படுத்துகின்றது ஆனால், இவ்வாறான செயல்கள் இடம் பெறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. தாக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சை […]

முக்கிய செய்திகள்

ரோகிங்கியா அகதிகளை நாடு கடத்த வேண்டாம் என தமிழர் தரப்பு கோரிக்கை

  • January 9, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்கியா அகதிகளை நாடுகட்த்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களைப் பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இன்று (9) முன்னெடுக்கப்பட்டது. கையில் பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் குறித்த கவனயீர்பு போராட்டம் நடத்தப்பட்டது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினரால் பெண்கள் குழுக்களின் பிரதிநிதிகள்,மனித உரிமை பாதுகாவலர்கள் கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் இணைந்து […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் இடியன் துப்பாக்கியால் அத்தானை சுட்டார் மச்சான்

  • January 9, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு கூழாமுறிப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமுற்று மாஞ்சோலை வைத்தியசாலையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் நேற்று (08) இரவு நடைபெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பினை சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அக்காவின் கணவருக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்ட மனகசப்பு கைக்கலப்பாக மாறியுள்ளது. அதனையடுத்து, கோபடைந்த தம்பி கத்தியால் அத்தானை வெட்டியுள்ளார். அது பலனளிக்காத நிலையில் இடியன் துப்பாக்கிகளை எடுத்து வந்து தனது அக்காவின் கணவரை […]

முக்கிய செய்திகள்

வடக்கில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர்கள் ஆர்வம் – யாழ் எம்பிக்கள்

  • January 8, 2025
  • 0 Comments

புலம்பெயர் தமிழ் உறவுகள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன் மற்றும் வைத்தியர் பவானந்தராஜா ஆகியோர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு விவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல் ஒன்றை இன்றைய தினம் பாரளுமன்ற அலுவலகத்தில் நடத்தினர். இதன் போது வடக்கு மாகாணத்தில் ஐந்து தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக காணிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் வேலைத் […]