இன்று அதிகாலை கொழும்பில் துப்பாக்கிசூடு ஒருவர் பலி ஒருவர் காயம்
கொழும்பில் நேற்றிரவு (05-09) மற்றும் இன்று அதிகாலை (06-09) என இரு தனித்தனியான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதல் சம்பவம் நேற்று இரவு 11.45 மணியளவில் கிராண்ட்பாஸ் மஹாவத்த மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் ரிவோல்வர் துப்பாக்கியால் ஒருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டாவது சம்பவம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட […]