உள்ளூர்

வவுனியா குருந்தூர் மலையில் கைதான விவசாயிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

  • June 4, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ‘மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலியா, இந்த மண் எங்களின் சொந்தமண், பண்பாட்டு இனப்படுகொலையை நிறுத்து, குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், இனப்படுகொலை […]

உள்ளூர்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி மீட்பு!

  • June 3, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயான மனித புதைகுழியில் இருந்து, ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி இன்று (03) முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. அதனை அடுத்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது. இரண்டாம் நாளான 16ஆம் திகதி அகழ்வின், போது முழுமையான என்புத்தொகுதிக்கு மேலதிகமாக , […]

உள்ளூர்

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

  • June 3, 2025
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மின்சார சபையின் கடிதத் தலைப்பின் கீழ் இந்த நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வலுசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆவார். இதற்கிடையில், இலங்கை மின்சார சபையின் தலைவராக இதுவரை பணியாற்றி வந்த பொறியியலாளர் கலாநிதி டி.ஜே.டி. சியம்பலாபிட்டியவின் ராஜினாமா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்>ஜனாதிபதி அநுரவுக்கு அவசர தந்தி அனுப்பிய டக்ளஸ்! […]

உள்ளூர்

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

  • June 3, 2025
  • 0 Comments

2025.05.06 அன்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுத் தலைவர்களால் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி நிறுவனங்களின் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்ய அல்லது முறைப்பாடளிக்க எந்தவொரு நபருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 7 ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பார்வையிடும் வாய்ப்பு […]

உள்ளூர்

35 இற்கும் அதிகமான சபைகளில் ஆட்சியமைப்பதற்கு முயற்சிப்பதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்

  • June 1, 2025
  • 0 Comments

வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் 35இற்கும் அதிகமான சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் பதில்பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 377ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் வடக்கு,கிழக்கில் 35சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு எதிர்பார்ப்புடன் உள்ளது. அண்மைய நாட்களில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய […]

உள்ளூர்

பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு!

  • May 31, 2025
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்) மட்டக்களப்பு அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று முற்பகல் முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. விசேட அதிரடிப்படையின் உதவியுடன் கொழும்பிலிருந்து சென்ற குற்றத்தடுப்பு புலனாய்வுத்துறையினரினால் நேற்று இரவு வரை சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது ஆவணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி, 9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்கள் […]

உள்ளூர்

புதிய கொவிட் திரிபு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது!

  • May 31, 2025
  • 0 Comments

ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபு நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் வைரஸின் துணை வகைகளான எல் எஃப் பொயிண்ட் செவன் மற்றும் எக்ஸ் எஃப் ஜி என்ற திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த நாட்டில் பதிவாகி வருவதாகக் வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார். நாட்டின் பல வைத்தியசாலைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் குறித்து வைத்திய ஆராய்ச்சி […]

உள்ளூர்

கைவிடப்பட்ட நிலையில் துப்பாக்கி கண்டுபிடிப்பு!

  • May 31, 2025
  • 0 Comments

கற்பிட்டி – உச்சமுனை தேவாலயத்திற்கு பின்னால் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து கட்டுத் துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் என்பன நேற்று முன்தினம் (29) கைப்பற்றப்பட்டுள்ளன. கற்பிட்டி விஜய கடற்படையினர் வழங்கிய இரகசிய தகவலுக்கு அமைய கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஆர் லக்ஸ்மன் றன்வல ஆராச்சி தலைமையிலான பொலிஸார் குறித்த பகுதியில் சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதன்போதுஇ காட்டுப் பகுதியில் இருந்து கட்டுத் துப்பாக்கி ஒன்றும்இ பாவிக்கப்படாத தோட்டாவொன்றும்இ வெற்றுத் தோட்டா ஒன்றும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

திருகோணமலை மாநகர சபையின் முதல்வர் தெரிவு நிறைவு

  • May 28, 2025
  • 0 Comments

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் அரசுக் கட்சி அறிவித்துள்ளது. திருகோணமலை தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் ,ன்று புதன்கிழமை (28) ,டம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த முடிவை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட குழு தலைவருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். சபைக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு குறித்த தெரிவானது ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் திருகோணமலை முதலாவது மாநகர சபைக்காக […]

உள்ளூர்

புhடசாலைகளில் சிறுவர் சித்திரவதைகளுக்குட்படுத்தப்படுவது அதிகரித்துள் பிரதமர் ஏற்பு

  • May 28, 2025
  • 0 Comments

பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாதெனவும், அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த அதிபர்களை தெளிவுபடுத்தும் வகையில் கல்வியமைச்சில் நேற்று (27-05) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து […]