உள்ளூர்

அரசாங்கம் அதிகாரப்போக்கில் செயற்படுகிறதென வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் குற்றஞ்சாட்டு

  • April 13, 2025
  • 0 Comments

நீர்வேலியில் பிரதமர் கலந்துகொண்ட பிரச்சார மேடையில் தன் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு நீண்டதாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நீர்வேலி வாய்க்கால் தரை பிள்ளையார் கோவில் முற்றத்தில் கோவிலின் முகப்பினை மறைத்து மேடை அமைத்து தேசிய மக்கள் சக்தி பிரச்சாரக் கூட்டத்தினை நடத்தியது. அப்பிரச்சாரம் தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என்பதை நேரில் தேர்தல் முறைப்பாட்டு அலுவலர்கள் முன் சுட்டிக்காட்டினேன். அது பற்றிய முறைப்பாடுகளையும் மேற்கொண்டேன். சட்ட, […]

உள்ளூர்

பிள்ளையானை 3 மாதங்கள் தடுப்பில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

  • April 12, 2025
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கடந்த செவ்வாய்க்கிழமை (08-04) மாலை மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் விபச்சார விடுதி முற்றிகை 3 பெண்கள் உட்பட 4வர் கைது

  • April 10, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கிடமான வகையில் வீட்டில் இயங்கி வந்த விபச்சார விடுதியே நேற்று (09-04) யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது 68 வயதான வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன் அளவெட்டி, குருநகர், கொடிகாமம் போன்ற பிரதேசங்களை சேர்ந்த 40, 42, 53 வயதுடைய மூன்று பெண்களும் […]

உள்ளூர்

ரணில் கோட்டா அரசில் 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியினை மட்டக்களப்பிற்கு கொண்டுவந்தேன்- இரா.சாணக்கியன்

  • April 7, 2025
  • 0 Comments

கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்து இந்த மாவட்டத்தில் அபிவிருத்திகளை செய்திருந்தேன். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் 51 மில்லியன் ரூபாவினை மட்டுமே மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு, மகிழுர் கலாசார மண்டபத்தில் நேற்று (06-04) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக […]

உள்ளூர்

இந்திய பிரதமரிடம் முன்வைக்க வேண்டிய கோரிக்கை குறித்து மகஜர் கையளிபபு

  • April 5, 2025
  • 0 Comments

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உயரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பிரதமரிடம் வழியுறுத்தக் கோரி வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு நேற்று (04-04) அவசர மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர் யே.யாட்சன் பிகிறாடோ தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது. […]

இந்தியா உள்ளூர்

இலங்கை – இந்தியா இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

  • April 5, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது    

உள்ளூர் முக்கிய செய்திகள்

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

  • April 1, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும் நாளை வரை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹீர் மற்றும் கே.பி.பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் ஸ்தலத்தில் பலி மற்றொரு இளைஞன் படுகாயம்

  • March 29, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. ஏழாலை தெற்கை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். கந்தரோடை பகுதியில் வேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

இந்தியப் பிரதமர் மோடி தமிழரசுக் கட்சியை சந்திப்பாரா? பழைய பஞ்சாக்கத்துடன் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்

  • March 29, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நேற்று (28-03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது இலங்கை தமிழரசு கட்சியினர் அவரை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது. அந்த சந்திப்பிலே முக்கியமாக இப்போதிருக்கக்கூடிய எங்களுடைய மாகாண சபை முறைமை தொடர்பாக அதில் இருக்கும் அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் அதனுடன் இணைந்த பல […]

இந்தியா

தமிழக மீனவர் பிரச்சினை 1974 ம் ஆண்டிருந்து தொடங்கியது என இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்

  • March 28, 2025
  • 0 Comments

இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில்இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்படுவது குறித்து திமுக உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ‘இலங்கையில் இரண்டு சட்டங்கள் உள்ளன. 1996-ஆம் ஆண்டின் மீன்வள மற்றும் நீர்வாழ் வளச் சட்டம் மற்றும் 1979-ஆம் ஆண்டின் வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் மீன்வள ஒழுங்கு […]