மட்டக்களப்பில் மாடு திருடிய இளைஞனை மக்கள் அடித்தே கொன்றுள்ளனர்
அண்மையில் மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் மாடுகளை திருடிய இளைஞன் பொதுமக்களால் மடக்கிப் பிடித்து தாக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (25-03) அதிகாலை உயிரிழந்துள்ளார் கடந்த 15ஆம் திகதி வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புதுமண்டபத்தடி பிரதேசத்தில் மாட்டினை திருடியபோது இந்த இளைஞனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தாக்கி, அந்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து, அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டது. அதையடுத்து, அவரை […]