உள்ளூர்

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி வெல்லுமென்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

  • March 17, 2025
  • 0 Comments

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடல், முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் நேற்று (16-03-2025) இடம்பெற்றது. இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் புதிய கூட்டணி – சைக்கிள் சின்னத்தில் போட்டி

  • March 16, 2025
  • 0 Comments

ஜனநாயக தமிழரசுக் கட்சி உள்ளிட்ட மேலும் சில கட்சி மற்றும் அமைப்புகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்துள்ளதாக ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கருணாகரன் நாவலன் தெரிவித்துள்ளார் சைக்கிள் சின்னத்தில் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதா அவர் மேலும் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (15-03-2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ் மக்களின் விடயத்தில் அநுர அரசாங்கத்திற்கும் முன்னைய அரசாங்கங்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை- ஜோசப் ஸ்டாலின்

  • March 5, 2025
  • 0 Comments

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த கால அரசுகளைப் போன்று அனுர அரசும் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். வட மராட்சிக்கு நேற்று (04-03-2025) விஜயம் மேற்கொண்ட இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை இலங்கை நிராகரித்துள்ளது

  • March 4, 2025
  • 0 Comments

மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலகா, அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நம்பகமான மற்றும் சுயாதீனமான உள்நாட்டு செயல்முறைகள் மூலம் மனித உரிமைகள் சவால்களை எதிர்கொள்வதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் நடத்துதல் மற்றும் அதன் பின்னர் நமது பல தசாப்த கால ஜனநாயக நடைமுறைக்கு ஏற்ப கண்ணியமான மாற்றம் என்ற மாதிரியின்படி, கடந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் பராலைட் வெடித்து இளைஞர் காயம்!

  • March 3, 2025
  • 0 Comments

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி திருநீற்றுக்கேணி கடற்கரைப் பகுதியில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த கடற்கரையில் இன்று மாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் கடலில் மர்மப் பொருள் ஒன்று மிதப்பதைக் கண்டு அதை கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இதன்போது குறித்த மர்மப் பொருள் வெடித்ததில் 25 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள காத்தான்குடி பொலிஸார் குறித்த மர்மப்பொருள் பராலைட் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

  • March 2, 2025
  • 0 Comments

நீண்டாகாலமாக விடுதலையின்றி சிறைகளில் வாடும் ஆனந்தசுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல்கைதிகளை உடனடியாக விடுதலைசெய்யுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் நேற்று (01-03-2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாடு அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் பலரும் விடுதலையின்றி நீண்டகாலமாக சிறையில் வாடுகின்றனர். குறிப்பாக கிளிநொச்சி, மருதநகரை சேர்ந்த ஆனந்தசுதாகர் என்பவர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பத்திரிகையில் வெளிவந்த செய்தி உண்மைக்கு புறம்பானது-யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கம்

  • March 1, 2025
  • 0 Comments

யாழ். போதனா வைத்தியசாலையில் விபத்து, சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ATICU ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை சம்பந்தமான விளக்க ஊடக அறிக்கை ஒன்றினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் சங்கம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1. மேற்படி பிரிவு 20 வருடங்களுக்கு மேலாக யாழ் மக்களுக்குத் தேவையான அவசியமான சிகிச்சை, பராமரிப்பு முறைகளை திட்டமிட்டு தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. 2. இங்கு மிகக்குறைந்த தாதியர் ஆளணியுடன் வினைத்திறனான சேவையை வழங்கி வருகின்றனர். இந்த அலகிற்கான சேவையை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டன!

  • March 1, 2025
  • 0 Comments

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இரணைமடு குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கத்தில், இரணைமடு குளத்தின் நான்கு வான்கதவுகள் இன்றைய தினம் திறக்கப்பட்டன. இதனால் குளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.    

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியா மெனிக்பாமில் இருந்த 27 இளைஞர்கள்; கொலை செய்யப்பட்ட வீடியோ ஆதாரம் உள்ளது-சாணக்கியன் எம்.பி

  • March 1, 2025
  • 0 Comments

கடந்த காலங்களில் கொலைகளிலும் மற்றும் சூழ்ச்சிகளிலும் ஈடுபட்ட குழுக்களுக்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா என்ற சந்தேகங்கள் நிலவுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (28-02-2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு,செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளின் செலவு தலைப்புகளின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த காலங்களில் திரிபோலி பெட்ரோன் ஊடாக இடம்பெற்ற […]

உலகம் புதியவை முக்கிய செய்திகள்

3 அழகிய அமெரிக்க யுவதிகள் கடற்கரை சொகுசு விடுதியில் மர்ம மரணம், அறையில் போதை மாத்திரைகள் மீட்பு

  • February 27, 2025
  • 0 Comments

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த யுவதிகள் அமெரிக்காவை சேர்ந்வர்கள் என கூறப்படுகின்றது. அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்தவர்கள் 3 இளம்பெண்கள் பெலிசேவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அதீத போதை காரணமாக உயிரிழந்திருக்கலாம் குட்டி தீவு நாடான அதன் கடற்கரை நகரான சென் பெட்ரோவில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓர் அறையை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் திடீரென […]