சீனா 2026 பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை இலவசமாக வழங்க ஒப்புதல்
சீனா 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை இலவசமாக வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் அரசின் உதவியுடன் இயங்கும் பாடசாலைகளில் கல்வி கற்கும் 44 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடையவுள்ளனர். இந்த ஒப்பந்தம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கல்வி அமைச்சு அதிகாரிகளும், இலங்கைக்கான சீன தூதரரும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது.
