உள்ளூர் முக்கிய செய்திகள்

மின்சார சபை தொழில் சங்கங்கள் தொழில்சங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எச்சரிக்கை

  • September 7, 2025
  • 0 Comments

இலங்கை மின்சார சபை (CEB) தொழிற்சங்கங்கள், தங்களது கோரிக்கைகள் செப்டம்பர் 15க்குள் நிறைவேற்றப்படாவிட்டால், அத்தியாவசிய சேவைகள், குறிப்பாக மின்சாரக் விநியோக தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்தல் நிறுத்தப்படும் என நேற்று (06-09) எச்சரித்துள்ளன. சமீபத்தில், அரசு நிறுவனங்கள் (SOEs) மறுசீரமைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் தமது நீண்டநாள் பிரச்சினைக்கு காணப்படாத காரணமாக, பல தொழிற்சங்கங்கள் தொழிலசங்க நடவடிக்கையை (work-to-rule) தொடங்கியிருந்தன. தற்போது, நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பு குறைக்கப்படுவதாகவும், கோளாறுகள் மற்றும் முக்கிய சேவைகள் மட்டுமே கவனிக்கப்படுவதாகவும், ஆனால் நிர்வாகத்துடன் […]

உள்ளூர்

இன்று அதிகாலை கொழும்பில் துப்பாக்கிசூடு ஒருவர் பலி ஒருவர் காயம்

  • September 6, 2025
  • 0 Comments

கொழும்பில் நேற்றிரவு (05-09) மற்றும் இன்று அதிகாலை (06-09) என இரு தனித்தனியான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதல் சம்பவம் நேற்று இரவு 11.45 மணியளவில் கிராண்ட்பாஸ் மஹாவத்த மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் ரிவோல்வர் துப்பாக்கியால் ஒருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டாவது சம்பவம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தங்காலை நகரசபை செயலாளர் உட்பட 15 பேர் பலி 16 பேர் படுகாயம்.

  • September 6, 2025
  • 0 Comments

எல்ல–வெளவாயைச் சாலைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அழைத்து சென்ற பேருந்து 1,000 அடி பள்ளத்தில் விழுந்ததில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றது. விபத்து நேற்று (05-09) நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் எட்டு பெண்கள், இரண்டு சிறுவர்கள், பேருந்து ஓட்டுனர் மற்றும் தங்காலை நகரசபை செயலாளர் டபிள்யூ.கே. ரூபசேன உள்ளிட்டோர் அடங்குகின்றனர். மேலும் 16 பேர் காயமடைந்த நிலையில் பதுளை […]

உள்ளூர்

நெற்செய்கையாளர்கள் நெல் உற்பத்தி செலவினை மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை

  • September 4, 2025
  • 0 Comments

நெற்செய்கையாளர்கள் நெல் உற்பத்தி செலவினை மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை விவசாயிகள் நெல் உள்ளிட்ட விவசாய பொருட்களின் உற்பத்தி செலவுகள் எவ்வாறு உயர்ந்துள்ளன என்பதை கருத்தில் கொண்டு, சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கூறுவதாவது, இவ்வாறு ஆய்வு செய்யப்படாததால் நெல் விலை நிர்ணயம் செயல்முறைப் பூர்வமற்றதாக இருப்பதாக தெரிவிக்கின்றார்கள் தேசிய வேளாண் ஒற்றுமை அமைப்பின் தலைவர் அனுராதா தென்னகோன், ‘அரசு விவசாய உற்பத்தி செலவுகளை சரியாக கணக்கிடவில்லை. தவறான மற்றும் சரியான தரவுகளின்றி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ்பிரிவில் 21 மில்லியன் ரூபா மதிப்பிலான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

  • September 3, 2025
  • 0 Comments

கடந்த சனிக்கிழமை (30-08) யாழ்ப்பாணம், மாதகல் சம்பிலித்துறையில் கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 96 கிலோ 500 கிராம் எடையிலான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. வடக்கு கடற்படை தளபதியின் கீழ் செயல்படும் ளுடுNளு கஞ்சதேவா முகாமினர் பெற்ற நம்பகமான தகவலின் அடிப்படையில், சம்பிலித்துறை கடற்கரையில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது, நான்கு மூட்டைகளில் மறைக்கப்பட்டிருந்த இந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் தெருமதிப்பு ரூபாய் 21 மில்லியனை விட அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட […]

உள்ளூர்

நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு மத்திய வங்கியின் சுயாதீனம் அவசியம் என்கிறார் ஆளுநர் நந்தலால் வீரசிங்க

  • September 1, 2025
  • 0 Comments

மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு உரையில் அவர் பேசியபோது, அரசியல் தலையீடும் சுயாதீனமின்மையும் 2022ஆம் ஆண்டின் நிதி நெருக்கடியை உருவாக்கிய முக்கிய காரணிகள் எனக் குறிப்பிட்டார். அந்தக் காலகட்டத்தில் பெரும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ‘பணம் அச்சிடும்’ நடைமுறை பின்பற்றப்பட்டது. இதனால் பணவீக்கம் 70 சதவீதத்திற்கு அருகில் உயர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். விலை நிலைத்தன்மையும் நிலையான பொருளாதார வளர்ச்சியும் உறுதிப்படுத்த, தெளிவான அதிகாரப்பூர்வ பணிக்கூற்று கொண்ட வலுவான மற்றும் சுயாதீன மத்திய வங்கி அவசியம் என அவர் […]

உள்ளூர்

சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு வீட்டிலிருந்து உணவு அனுமதி

  • September 1, 2025
  • 0 Comments

விளக்கமறியலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் ரஜித சேனரத்னையும் நிமல் லன்சாவையும், அவர்கள் வீட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளை பெற்றுக்கொள்ள சிறைச்சாலைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சிறைச்சாலைத்துறை பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்ததாவது, இருவரும் எழுத்துப்பூர்வமான கோரிக்கைகளை சமர்ப்பித்ததன் பின்னரே இந்த அனுமதி வழங்கப்பட்டதாகும். ரஜித சேனரத்ன அரசு நிதிக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் வருகிற செப்டம்பர் 9 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், 2006 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ் முதற் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் 98வது பிறந்தநாள்

  • August 31, 2025
  • 0 Comments

முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் 98வது பிறந்தநாள் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மன்னார்மாவட்ட அரசாங்க அதிபர் முன்னாள் விஸ்வலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நினைவுப் பேருரையை பேராசிரியர் பொன் பாலசுந்தரம் நிகழ்தினார் சிறப்புரையை மறவன்புலவு சச்சிதானந்தன் நிகழ்த்தினார்கள். நிகழ்வில் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, எம். கே. சிவாஜிலிங்கம், கலாநிதி கா. விக்னேஸ்வரன், முன்னாள் யாழ். முதல்வர் செல்லன் கந்தையன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், முன்னாள் பிரதேச […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இன்றைய எரிபொருள் விலை மாற்றத்தின் பின் விலை நிலைத்திருக்கும் – சிபிசி

  • August 31, 2025
  • 0 Comments

  இலங்கையில் எரிபொருள் விலைகள் இன்று (31-08) நள்ளிரவில் அறிவிக்கப்படவுள்ள மாதாந்திர திருத்தத்திற்குப் பிறகும் மாறாமல் நீடிக்கும் என சிலோன்   பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC)  இயக்குநர் டாக்டர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்பு மொத்தத்தில் சுமார் 10 சதவீத குறைப்பு ஏற்பட்டுள்ளதைத் தவிர, எரிபொருள் விலைகளில் பெரிய மாற்றமில்லை. ‘அது குறிப்பிடத்தக்க குறைப்பா என்பதைக் குறித்து நான் முடிவு செய்ய முடியாது,’ எனவும் குறிப்பிட்டார். இலங்கை தற்போது உலக […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாதாள உலக கோஷ்டி கொழும்புக்கு இழுத்துவரப்பட்டனர்

  • August 30, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக கோஷ்டி இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரகள்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுவட்டாரத்தில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன