உள்ளூர் முக்கிய செய்திகள்

பொது எதிரணியை உருவாக்க மொட்டு கட்சி அழைப்பு

  • August 14, 2025
  • 0 Comments

தாய்நாட்டை பாதுகாக்க எதிரணிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சி உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க இதுகுறித்து கூறியதாவது: ‘நாட்டு மக்களுக்கு தலைமைத்துவம் அவசியம். எனவே, முதலில் நாம் ஒன்றிணைந்து கூட்டு எதிரணியாக செயல்படுவோம். அதன் பின்னர் பயணத்தை தீர்மானிக்கலாம். அரசாங்கம் ஆட்சியில் ஒரு வருடமாக இருக்கிறது. ஆனால் பிரச்சினை ஏற்பட்டால், மக்கள் பிரதிநிதி கடிதம் […]

உள்ளூர்

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம் – பொலிஸார் குவிப்பு

  • August 14, 2025
  • 0 Comments

இன்று ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக பெரும் போராட்டம் ஒன்று நடந்தது. சம்பவத்தின் போது அந்த பகுதியில் பெரும் பதற்றம் உருவாகியதால், பொலிஸார் குவிந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதையும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன நிலங்களை ஆக்கிரமிப்பதையும் எதிர்த்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக, முத்துநகர் பகுதியில் உள்ள 600 ஏக்கர் வயல் நிலத்தை இந்திய நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வன நிலங்களின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துமே இந்த […]

உள்ளூர்

இலங்கையில் கஞ்சா உற்பத்திக்கு அனுமதி

  • August 12, 2025
  • 0 Comments

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கு முதலீட்டு சபையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின் முன்னாள் அத்தியட்சகர் வைத்தியர் தம்மிக்க அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். அவரின் விளக்கத்தில், முதலீட்டு சபையின் திட்டத்தின் படி இந்த அனுமதி வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 37 பேர் விண்ணப்பித்த நிலையில், ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. […]

உள்ளூர்

புதிய பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமனம்!

  • August 12, 2025
  • 0 Comments

நாட்டின் 37ஆம் பொலிஸ் மா அதிபராக, தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடி அங்கீகாரம் வழங்கியது. முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகள் 6 பேரூம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

  • August 12, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் உரிமைகளை ரத்து செய்யும் அரசாங்கத்தின் புதிய சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ரேணுகா பெரேரா தாக்கல் செய்துள்ளார். இதில், சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார். மனுதாரர் தனது மனுவில், கடந்த 7ஆம் திகதி அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இணைத்ததாகவும், அதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் சட்டரீதியாக ரத்து செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், முன்மொழியப்பட்ட […]

உள்ளூர்

யாழ் கொடிகாமத்தில் ஏ9 வீதியில் டிப்பர், லொரி, கார்…. விபத்து ஒருவர் பலி, பலர் காயம்

  • August 11, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம்–கண்டி ஏ9 வீதியில், கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு (10-08) இடம்பெற்ற பல வாகன மோதல் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஒருவர் அமர்ந்திருந்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதியது. உயிரிழந்தவர் மிருசுவில் கரம்பஹம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளைத் தவிர்க்க டிப்பர் வாகன சாரதி பிரேக் போட்டபோது, அதே திசையில் வந்த […]

உள்ளூர்

இலங்கையின் முதலாவது பணக்காரனாக இஸாரா நாணயக்கார முதலிடத்தைப் பிடித்துள்ளார்

  • August 10, 2025
  • 0 Comments

கல்ஃப் நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் இஸாரா நாணயக்கார இலங்கையின் முதல்நிலை செல்வந்தராகத் திகழ்கிறார். இதன் மூலம், அவர் தம்மிக்க பெரேராவை முந்தி நாட்டின் பணக்கார பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். கல்ஃப் நியூஸ் வெளியிட்ட தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலில், இந்திய தொழிலதிபர் முகேஸ் அம்பானி 118 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் பிராந்தியத்தின் மிகப்பெரிய செல்வந்தராக இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தானின் ஸாஹித் கான் 13.5 பில்லியன், […]

உள்ளூர்

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காணுமாறு கோரிக்கை

  • August 10, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்கள் உதவுமாறு, காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர், சட்டத்தரணி கலாநிதி தற்பரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் நடைபெற்று வரும் வழக்கு இலக்கம் யுசுஃ804ஃ23-இன் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட தொல்பொருள் ஆய்வுகளின் அடிப்படையில், இந்த புதைகுழி 1994 முதல் 1996 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. காணாமல் போனோர் அலுவலகம், 2016ஆம் ஆண்டின் […]

உள்ளூர்

திருமலையில் வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் 100 நாள் செயன்முனைவின் 10ஆம் நாள் போராட்டம் நடைப்பெற்றது

  • August 10, 2025
  • 0 Comments

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஸ்டி அரசியல் தீர்வை வலியுறுத்தி, திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேசத்தின் திரியாய் கிராமத்தில் இன்று மக்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வு, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயன்முனைவின் 10ஆம் நாளாகும். போர் பாதிப்புகளால் நீண்டகாலமாக சிக்கலில் உள்ள திரியாய் மக்கள், இன்றும் நில அபகரிப்பு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனை எதிர்த்து, திரியாய் மக்களும், பல்வேறு இடங்களில் இருந்து வந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட 43 பொருட்களை மக்கள் பார்வையிட்டனர்

  • August 6, 2025
  • 0 Comments

இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக அறிவிக்கப்பட்ட வளாகத்திலேயே பொதுமக்கள் பார்வைக்கு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 54 பிற பொருட்களில் 43 பொருட்கள் 2025 ஆகஸ்ட் 5 பிற்பகல் பொதுமக்களுக்கு, குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமையுடன் காட்டப்பட்டன. இருநூறுக்கும் மேற்பட்ட போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இதில் பங்கேற்றும், 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடிய தங்கள் உறவினர்களின் எந்தப் பொருளையும் அடையாளம் […]