கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளி இராணுவத்தில் இருந்தவர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் கைது
எவராக இருப்பினும் பாரபட்சமின்றி சட்டம் அமல்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரி, இராணுவ அதிகாரி ,குற்றவாளி எனப் பாராமல் அனைவருக்கும் எதிராகச் சட்டம் அமல்படுத்தப்படும் எனக் கூறினார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். மித்தெனியவில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரி ஒருவரும், கணேமுல்ல சஞ்சீவ கொலையில் தொடர்புடைய ஒரு காவல்துறை அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக […]