உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலங்கள் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்
உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலத்தின் இரண்டு வாசகங்கள் அரசியலமைப்புக்கு முரணாக காணப்படுவதால் அவை விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் சட்டமூலத்தின் ஏனைய வாசகங்களை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாராளுமன்றம் இன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதன்போது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை சபாநாயகர் சபைக்கு வருமாறு அறிவித்தார். அரசியலமைப்பின் 12 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டு மூன்று நீதியரசர்கள் கொண்ட குழாமின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட […]