யாழ்போதனாவின் ஆளணியை அதிகரிக்குமாறு ஆளுநரிடம் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆளணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநரிடம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கையை முன் வைத்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று (5-02-2025) விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் பணிப்பாளரிடம் கேட்டறிந்து கொண்டார். அதன் போது பணிப்பாளர், வைத்தியசாலையின் தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், புதிய கட்டிட தொகுதி ஒன்றை அமைக்கப்பட வேண்டும், வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள் […]