உள்ளூர் முக்கிய செய்திகள்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குடிவரவு அதிகாரி கைது!

  • January 23, 2025
  • 0 Comments

5 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றுக்கொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், நல்லூர் வடக்குப் பகுதியை சேர்ந்த நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்ட நபர், வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு மையத்திலிருந்து விடுவிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக சந்தேகநபர் இந்த இலஞ்சத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது. சந்தேகநபர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெலிசறை […]

முக்கிய செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டம் நிட்சயம் நீக்கப்படும் – பிரதி அமைச்சர் சுனில் வடகல

  • January 23, 2025
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் என்று ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியதாக பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்துள்ளார் இந்த சட்டத்தை இரத்து செய்வது தொடர்பிலும், மாற்றீடு சட்டம் உருவாக்கம் தொடர்பிலும் ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. உப குழுவின் பரிந்துரைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இச்சட்டத்தின் பாரதூரத்தை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே சட்டத்தை நிச்சயம் இரத்துச் செய்வோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் […]

முக்கிய செய்திகள்

சட்டத்தரணி சுமந்திரனை விசாரணைக்குட்படுத்துமாறு சிறிதரன் எம்பி பாராளுமன்றத்தில் முழக்கம்

  • January 22, 2025
  • 0 Comments

தமிழரசுக் கட்சியின் உட்கட்சி சண்டை பாராளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டதன் பின்னணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளார் என்ற தொனிப்பிட சிறிதரன் நேற்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி போராடுவதற்காக பாராளுமன்றம் அனுப்பபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனக்கு சுமந்திரனிடமிருந்து நீதி வேண்டி நேற்று பாராளுமன்றத்pல் சபாநாயகரிடம் விநயமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் […]

முக்கிய செய்திகள்

டிஜிட்டல் பிளாட்போம் எம்பி. அர்ச்சுனா கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

  • January 21, 2025
  • 0 Comments

யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அநுராதபுரம் ரம்பாவ பகுதியில் இன்றைய தினம் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விளக்குகளை ஒளிரச் செய்து வாகனத்தை செலுத்தி சென்றுள்ளார். இதன்போது,போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் அர்ச்சுனாவின் வாகனத்தை நிறுத்தி அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர். பின்னர், அர்ச்சுனா […]

முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுரவின் அரசியல் சூனியத்தால் நாடு உலகளாவிய அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது- புபுது ஜாகொட

  • January 21, 2025
  • 0 Comments

அரசாங்கம், இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் மூலம் வடகிழக்கு மாகாணங்களை இந்தியாவின் ஆதிக்கத்துக்கு கீழ் கொண்டுவந்துள்ளார் தென் மாகாணத்தின் கீழ் பிரதேசங்களை சீன அரசாங்கத்துக்கு வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த இணக்கப்பாடுகள் மூலம் இலங்கை உலகளாவிய அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளா . ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள […]

முக்கிய செய்திகள்

மன்னார் இரட்டைக்கொலை சம்பவத்தின் சூத்திரதாரி வெளிநாட்டில் வசிக்கின்றார்

  • January 18, 2025
  • 0 Comments

மன்னாரில் இருவர் பலியான துப்பாக்கிச்சூட்டு சம்பவம்; பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார் மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த வியாழக்கிழமை(16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார் என பொலிஸார் நடத்pய விசாரணையின் போது தெரியவந்துள்ளது மாட்டுவண்டி சவாரியின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து பலி வாங்கும் நோக்கில் இந்தக்கொலை […]

முக்கிய செய்திகள்

கல்வியில்லாதவர்கள் இரண்டு கண்களும் இல்லாதவர்கள்- வடக்கு மாகாண ஆளுநர்

  • January 17, 2025
  • 0 Comments

கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக அமைந்துவிடக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தேவையுடைய 217 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் சா.சுதர்சன் தலைமையில் நேற்று (16) நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். […]

முக்கிய செய்திகள்

இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

  • January 17, 2025
  • 0 Comments

ரஸ்சியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை பிணையில் விடுதலை செய்ய நுகேகொடை நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (17-01-2025) உத்தரவிட்டுள்ளார். உதயங்க வீரதுங்க 10 ஆயிரம் ரூபா ரொக்க பிணை மற்றும் இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உதயங்க வீரதுங்க கடந்த வெள்ளிக்கிழமை (10) மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை- – நீதி அமைச்சர்

  • January 14, 2025
  • 0 Comments

நாடாளவிய சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார வீரகேசரியிடம் தெரிவித்தார். அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நீண்ட காலமாகவும், சில வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கனேடிய அமைச்சரை சந்தித்த தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்!

  • January 12, 2025
  • 0 Comments

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் கடந்த 10 ஆம் திகதி மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. […]