உள்ளூர்

யாழ் பல்கலையில் மலையகத் தியாகிகள் மற்றும் 51ஆவது தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல்கள் !

  • January 10, 2025
  • 0 Comments

தேயிலைச் செடிகளின் நடுவே உழைப்புச் சுரண்டல்களுக்கும் அடிப்படை உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கி அடிமைப்படுத்தப்பட்ட மலையக தமிழ் மக்களினுடைய சமூக அரசியல் விடுதலைக்கான பயணத்தில் தம்முயிர் தந்த எம்மவர்களை நினைவேந்தும் மலையக தியாகிகள் தினம் ஜனவரி 10 அனுஷ்டிக்கப்படுகின்றது. 1974 ஆம் ஆண்டு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சிறீலங்கா அரச காவல்துறையால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்து 2025 ஆம் ஆண்டுடன் ஆண்டுகள் 51. இன்றுவரையில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நீதி என்பது மறுக்கப்பட்டதொன்றாகவே […]

உள்ளூர்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய எதிர்வு கூறல்!

  • January 7, 2025
  • 0 Comments

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகள் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்தின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் […]

உள்ளூர்

கிளிநொச்சி விபத்தில் படுகாயமடைந்த தாயும் உயிரிழப்பு!

  • January 3, 2025
  • 0 Comments

கிளிநொச்சி நகரில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் ரக வாகனம் மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்திருந்த நிலையில்இ சம்பவத்தன்றே இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. தந்தை தாய் மற்றும் மகள் ஆகியோர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்இ இன்றைய தினம் தாயும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். […]

உள்ளூர்

உள்ளூர் வகை அரிசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது- யாழ் வணிகர் கழகம்

  • January 2, 2025
  • 0 Comments

உள்ளூர் வகை அரிசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது அதில் எவ்வித சிக்கலும் இல்லை. இறக்குமதி அரிசியிலேயே தற்போது பிரச்சனை நிலவுகின்றது என யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார். உள்ளூர் வெளியூர் அரிசிகளின் விலை மற்றும் தொடர்பிலான ஊடக சந்திப்பு யாழ் வணிகர் கழகத்தில் இன்று இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் தற்போது அமுல்படுத்தியுள்ள கட்டுப்பாட்டு விலை […]

உள்ளூர்

யுத்தத்தில் உயிரிழந்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலன் குறித்து முக்கிய முடிவு

  • December 28, 2024
  • 0 Comments

யுத்தத்தில் உயிரிழந்த போர் வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களின் குடும்பங்களின் நலன்கள் குறித்து நிவர்த்தி செய்யும் குழுவின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு நிலை மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது யுத்தத்தில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் ஊனமுற்ற படைவீரர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களை அடையாளம் காண்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முறையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும், பூர்த்தி செய்யப்படாத […]

உள்ளூர்

சுனாமியால் காவுகொள்ளப்பட்டோருக்கான நினைவேந்தல் – முல்லைதீவு

  • December 26, 2024
  • 0 Comments

ஆழிப்பேரலையால் அடித்துச்செல்லப்பட்ட மக்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) காலை 8.05 மணியளவில் புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக நினைவுகூறப்பட்டது வன்னிகுறோஸ் மற்றும் சுனாமி நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள , புதுக்குடியிருப்பு ஐயனார் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது பொது சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றினர். நினைவு தூபிக்கு […]

உள்ளூர்

மக்கள் தமது சொந்த காணிகளையே கோருகின்றனர் – வடக்கு ஆளுநர்!

  • December 26, 2024
  • 0 Comments

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு தன்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளதாக என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வயாவிளான், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும், பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகையும்  வயாவியானில் […]

உள்ளூர்

கிளிநொச்சியில் விபத்து குழந்தை பலி தாய் தந்தை படுகாயம்

  • December 25, 2024
  • 0 Comments

கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை பலியான அதே வேளை குழந்தையின் தாய் தந்தை மற்றும் சகோதரனும் படுகாயமடைந்துள்ளனர் காயமடைந்த மூவரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (25) இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மது போதையில் ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி விப்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது விபத்து தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்  

உள்ளூர்

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் ரணில் விளக்கம்!

  • December 23, 2024
  • 0 Comments

2022 முதல் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையான தனது ஆட்சிக் காலத்தில் பொதுப் பிரதிநிதிகளின் மருத்துவ உதவிக்கான தனிப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதி நிதியத்தின் நிலையான நிர்வாக நடைமுறைகளின் கீழ் வழங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் தெளிவுபடுத்தியுள்ளார். அவர்களில் ஒருவரை தவிர, எவரும் 1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி உதவியைப் பெறவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும், குறித்த அறிக்கையில் தமது பதவிக் காலகட்டத்தில் செய்யப்பட்ட பல குறிப்பிடத்தக்க கொடுப்பனவுகளையும் […]

உள்ளூர்

இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு நிறைவு: யாழில் நினைவு கூரப்பட்டது.

  • December 19, 2024
  • 0 Comments

இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டு  75 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு இன்று யாழ். நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலைக்கு,இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், […]