உள்ளூர்

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி யாழில் கையெழுத்துப் போராட்டம்

  • July 19, 2025
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய், காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதவது நீதி வழங்கு, அனைத்து தேசிய இனத்தவருக்கும் சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்புக்காக போராடுவோம் போன்றவற்றை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடு 4 முதல் 5 வயது சிறுமியினுடையது என சந்தேகம்

  • July 16, 2025
  • 0 Comments

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட யாழ் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வு வழக்கு நேற்று (15-07) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில், நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தினார். அகழ்வுப் பணியின் இரண்டாம் கட்டம் தொடர்பான தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையும், சட்ட வைத்திய அதிகாரி பிரணவனின் அறிக்கையும் நீதிமன்றத்திற்கு […]

உள்ளூர்

இலங்கை கடற்படையால் முடியாதெனில் தமிழ் மீனவர்களே இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவர்- ரவிகரன் எம்.பி

  • July 15, 2025
  • 0 Comments

வடக்குக் கடற்பரப்பில் அதிகரித்து வரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படையால் முடியவில்லையெனில், அந்தப் பொறுப்பை ஒரு மாதத்திற்கு மீனவர்களிடம் ஒப்படைக்குமாறு; வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார மன்னார் முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரங்களை சூறையாடி வருகின்றன என்றும், இது தொடர்பாக கடற்படையும் அரசாங்கமும் காரணங்களையே கூறிக்கொண்டிருப்பதாகவும் […]

கட்டுரை

மின் கட்டணத்தால் மக்களுக்கு சொக் கொடுக்கும் மின்சாரசபை.

  • July 15, 2025
  • 0 Comments

இலங்கையின் மின் கட்டணங்கள் குறித்து பாவனையாளர்களிடையே எழும் கோபமும் குழப்பமும் புதியதல்ல. ஆனால், இப்போது அந்தக் கோபம் நியாயமானதோடு, மேலும் விரிவடைந்துள்ளது நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளான வீதி விளக்குகளுக்கான மின்சாரம் செலுத்தப்படாமல் இருக்க, அதன் செலவுகளை பொதுமக்களிடம் விலையீட்டுச் சுமையாக மாற்றுவதென்பது நிர்வாகப் பொறுப்பற்றதற்கும், அரசியல் கபடத்திற்கும் எடுத்துக்காட்டு ஆகும். இலங்கையின் சுமார் 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீதி விளக்குகள், ஆண்டுக்கு 150 கிலோவாட் மின்சாரத்தை உட்பொருந்துகிறது. இது சுமார் 7 பில்லியன் ரூபாய் செலவாகிறது. இந்த […]

உள்ளூர்

ஈஸ்ட்டர் தாக்குதல் விசாரணையில் வெளிப்படத்தன்மை இருக்குமென்கிறார் பிரதமர் ஹரணி

  • July 11, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் வெளிவரும் புதிய விடயங்களை தேவையான நேரத்தில் மக்களுக்கு அறிவிப்போம். இதில் மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு எதுவும் இல்லையென பிரதமரும் கல்வி, உயர்கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். சமிந்த விஜேசிறி தனது கேள்வியில், இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு […]

உள்ளூர்

அரசாங்கம் செய்த படுகொலைகளை அரசாங்கமே விசாரிக்கமுடியாது- தமிழரசுக்கட்சி

  • July 8, 2025
  • 0 Comments

உள்ளக விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை என கூறுவதன் ஊடாக அமைச்சர் விஜித்த ஹேரத், இது சிங்கள பௌத்த நாடு என்பதை மீளவலியுறுத்துவதுடன் தமிழர்களை மாற்றான் தாய் மனநிலையுடன் கையாள்வதாகச் சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசே விசாரணைகள் முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த வாரம் சிங்கள செய்திச்சேவை ஒன்றுக்கு அளித்திருக்கும் நேர்காணலில், நாட்டின் உள்ளக […]

உள்ளூர்

யாழ். செம்மணியில் மேலும் 3 மனித சிதிலங்கள் கண்டுபிடிப்பு!

  • June 28, 2025
  • 0 Comments

யாழ். செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணியின் போது மேலும் மூன்று மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்றுவரை 24 மனித எலும்புக்கூட்டுத்தொகுதி அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றையதினம் மேலும் 3 மனித மனித எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டுத்தொகுதிகளின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த நாட்களில் அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டு தொகுதியில், தாயொருவர் குழந்தையை அணைத்த […]

உள்ளூர்

செம்மணியில் மேலும் இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிப்பு!

  • June 27, 2025
  • 0 Comments

யாழ் செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய நேற்று இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் இரண்டாவது […]

உள்ளூர்

யாழ் செம்மணியில் புதிதாக மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் மீட்பு..!

  • June 26, 2025
  • 0 Comments

யாழ் செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் இன்று (26) மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய இன்று (26) இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி, சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுகள் […]

உள்ளூர்

தமிழீழ வைப்பகத்திலிருந்து மீட்க்கப்பட்ட நகைகளை பொதுவுடைமையாக்க வேண்டாமென செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை

  • June 6, 2025
  • 0 Comments

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட தங்க நகைகளை, உறுதி ஆதரத்துடன் இருக்கும் மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த நகைகளை அரச பொதுவுடமையாக்கும் நிலையை உருவாக்கி விடக்கூடாது என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (05-06) நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, […]