உள்ளூர்

புhடசாலைகளில் சிறுவர் சித்திரவதைகளுக்குட்படுத்தப்படுவது அதிகரித்துள் பிரதமர் ஏற்பு

  • May 28, 2025
  • 0 Comments

பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாதெனவும், அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த அதிபர்களை தெளிவுபடுத்தும் வகையில் கல்வியமைச்சில் நேற்று (27-05) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து […]

உள்ளூர்

அமைச்சர் சந்திரசேகர் அடித்தார் அந்தர் பெல்டி பிரபாகரனுக்கு சிலைவைப்பதாக தெரிவிக்கவில்லையாம்

  • May 23, 2025
  • 0 Comments

பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நாட்டில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரசாரமாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (22-05) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஹர்ஷண ராஜகருணா எம்பி தவறான கூற்றொன்றை நான் கூறியதாக சபையில் தெரிவித்துள்ளார். பிரபாகரனுக்கு சிலை வைப்பது […]

உள்ளூர்

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் – பிரிட்டிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

  • May 15, 2025
  • 0 Comments

இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்தமையை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனால் நீதிக்காக இன்னமும் குறிப்பிடத்தக்க அளவு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர். பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றியவேளை அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர் இலங்கையில் மனித உரிமை மீறல்களின் அளவு குறைவடையவில்லை என தெரிவித்துள்ள ஹரோ மேற்கிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரெத்தோமஸ் இந்த வருட ஆரம்பத்தில் பிரிட்டிஸ் அரசாங்கம் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக தடைகளை விதித்தது, ஆனால் நீதிக்கான […]

உள்ளூர்

மட்டக்களப்பில் பெண் மர்ம மரணம்

  • May 15, 2025
  • 0 Comments

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் உள்ள வீடொன்றில் பெண்ணின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, 1ஆம் வட்டாரத்தில் உள்ள பஸார் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண்ணே அவரது வீட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெண்ணின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர்

கமால் குணரட்ணவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் – சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்

  • May 15, 2025
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் ஆவணத்தை ஆதாரங்களுடன் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அமைச்சிடம் கையளித்துள்ளது இது தொடர்பில் ஐடிஜேபி மேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததை குறிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை நாங்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டியமைக்கான ஆதாரங்கள் அடங்கிய […]

உள்ளூர்

தமிழரசு கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் வவுனியாவில் சந்திப்பு

  • May 15, 2025
  • 0 Comments

வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று  நடைபெறுகிறது. உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர் வவுனியா மாநகர சபை உட்பட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பதில் கட்சிகளுக்கிடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நோக்கத்துடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரதிநிதிகள் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி நடித்தது பேரானந்தமென்கிறார் தென்னிந்திய நடிகர் எம்.எஸ் பாஸ்கர்

  • May 12, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு வந்து, யாழ்ப்பாணத்தில் உருவாகும் குறும்படத்தில் , யாழ்ப்பாண தமிழ் பேசி நடித்தமை அளவிட மகிழ்ச்சியை தந்துள்ளது என தென்னிந்திய திரையுலக பிரபல நடிகர் எம். எஸ் பாஸ்கர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உருவாகி வரும் ‘கர்மா’ எனும் குறும்படத்தில் நடிப்பதற்காக கடந்த வாரம் யாழ்ப்பாணம் வருகை தந்த எம். எஸ் பாஸ்கர் , யாழ். ஊடக சமயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இருந்து 42 நாட் […]

உள்ளூர்

பயங்கரவாத தடை சட்டம் 3 மாதத்திற்குள் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

  • May 11, 2025
  • 0 Comments

பயங்கரவாத தடை சட்டத்தை மூன்று மாதத்திற்குள் நீக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன் பிரகாரம் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்கவும், அதற்கு பதிலாக புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக நீக்காது திருத்தங்களை கொண்டு வரவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நீண்டகாலமாக உள்ளது. குறிப்பாக விடுதலை […]

உள்ளூர்

மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதிக்கோரி மாணவர்கள் அமைதி போராட்டம்

  • May 9, 2025
  • 0 Comments

16 வயதுடைய மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதிக்கோரி இன்று வெள்ளிக்கிழமை மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஜோர்ஸ் ஆர்டி சில்வா மாவத்தை வீதியில் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மாணவர்கள் நடை பவணியாக காலி முகத்திடலுக்கு செல்ல உள்ளார்கள். அங்கு மாலை 4 மணி வரை அமைதி போராட்டத்தை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர்

யாழில் போதைக்கு அடிமையான இளம் குடும்பஸ்த்தர் தற்கொலை

  • May 9, 2025
  • 0 Comments

யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் நேற்று (08-05) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அராலி – வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் 33 வயதுடைய வசந்தகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று (08-05) காலை இவ்வாறு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு மனைவி, தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் மனவிரக்தியடைந்த குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது […]