உள்ளூர்

மன்னாரில் 114 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிக்கள் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு

  • May 5, 2025
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் உள்ள 05 உள்ளூராட்சி சபைகளுக்குமான வாக்குப் பெட்டிகள் இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மன்னார் நகர சபை,மன்னார்,மாந்தை மேற்கு,நானாட்டான், முசலி ஆகிய பிரதேச சபைகள் உள்ளடங்களாக 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப் பெட்டிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் வைபவ ரீதியாக இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் ஐந்து சபைகளில் 103 சபை உறுப்பினர்களை தெரிவு செய்ய 114 […]

உள்ளூர்

யாழ் ஊர்காவற்றுறை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டது

  • May 5, 2025
  • 0 Comments

ஊர்காவற்றுறை வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகள் இன்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இரு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுப்படவுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன், பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன், தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் பொ. தயானந்தன், மேலதிக அரசாங்க அதிபரும் (காணி) […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதீத வெப்பம் காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு

  • May 1, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் அதீத வெப்பம் காரணமாக நேற்று (30-04) வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இந்த நபர் வீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்துள்ளார். அவ்வேளை அவரை வீதியால் சென்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் மயக்கமடைந்து மரணம் சம்பவித்துள்ளது என மரண விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் அந்த நபர் காலை உணவை அருந்தாமல், வீட்டிலிருந்து புறப்பட்டுச் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலதொடர்பாக 3,828 முறைப்பாடுகள் பதிவு

  • May 1, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி) 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 24 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3,563 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 241 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.  

உள்ளூர்

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்ய இராணுவத்தினர் இடையூறாக இருக்கின்றனர் – வடக்கு ஆளுநர் ஒப்புதல்

  • April 23, 2025
  • 0 Comments

விடுவிக்கப்பட்ட இடங்களில் விவசாயம் செய்ய இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன. இவை தொடர்பாக ஆய்வுகள் செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தின் வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட காணிகளில் விவசாயச் செய்கையை விரைவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (22-04) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் வேதநாயகன், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பொலிஸாருக்கு தண்ணி காட்டும் இஷாரா செவ்வந்தி

  • April 22, 2025
  • 0 Comments

கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்துக்குள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரை சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவி செய்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி மற்றும் 2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகிய இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என […]

உள்ளூர்

நிகழ்நிலை காப்பு சட்ட மாற்றீடு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

  • April 18, 2025
  • 0 Comments

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நிகழ்நிலை காப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பான ஏதேனும் விதிமுறைகள் நடைமுறையிலிருந்தால், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அந்த விதிமுறைகள் அனைத்தும் ரத்தாகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் தனிநபர் சட்டமூலமாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உள்ளூர்

ஈஸ்ட்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியும் அதற்கு உதவியவர்களையும் வெளிப்படுத்துமாறு கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள்

  • April 17, 2025
  • 0 Comments

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் மற்றும் அந்த கொடுரமான செயலிற்கு உதவியவர்கள் யார் என்பதை கண்டறிவது அவசரமான விடயம் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குறித்த தனது விசேட செய்தியில் கத்தோலிக்க ஆயர் பேரவை இதனை தெரிவித்துள்ளது. 2025ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்களாகின்றது என தெரிவித்துள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சுயாதீனமான பக்கச்சார்பற்ற விசாரணைகளை உறுதிசெய்வதற்காக […]

உள்ளூர்

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியை அகழ்வதற்கு அரசாங்கம் தயாரில்லையென்கிறார் கஜேந்திரகுமார்

  • April 15, 2025
  • 0 Comments

யுத்த காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத அப்போதைய ஜே.வி.பி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மூழ்கடிக்கும் முயற்சியே செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டுகிறார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுமார் 600க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் யாழ். செம்மணியில் புதைக்கப்பட்டமை […]

உள்ளூர்

மனிதப் படுகொலைக்காக ரணிலுக்கு வயது போனாலும் தண்டனை வழங்கப்படும். ஜேவிபி அரசு

  • April 13, 2025
  • 0 Comments

தென்னாபிரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைக்கு அமைய பட்டலந்த சித்திரவதை முகாமின் பிரதான பொறுப்புதாரிக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுப்போம். உலகில் உள்ள சிறந்த விசாரணை நிபுணர்களை அழைத்து மனித படுகொலையாளியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரது இறுதி காலத்திலாவது தண்டனை வழங்குவோம் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் […]