உள்ளூர்

கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு பிள்ளையானை கைது செய்தது

  • April 8, 2025
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான அவர் மட்டக்களப்பில் உள்ள கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூர்

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை

  • April 7, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றுஇடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மனு எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் ரீட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மனுக்கள் மீதான எதிர்ப்புகளை மே […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளுக்கான பிரிட்டனின் தடையை ஆராய அமைச்சரவை குழு நியமனம்

  • April 3, 2025
  • 0 Comments

பிரித்தானியாவினால் 4 இலங்கையர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டமை தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக மூன்று பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த தடை தொடர்பான விடயங்களை ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி அமைச்சரவைக்கு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காகக் குறித்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஆகியோரின் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பான வழக்கில் நடவக்கைகளை நாளை வரை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

  • April 2, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக ரீட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு நாளை வியாழக்கிழமை (03-04) வரை மீண்டும் நீடித்துள்ளது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை இன்று புதன்கிழமை (02-03) வரை இடைநிறுத்துமாறு தொடர்புடைய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில் இன்றையதினம் நாளை வியாழக்கிழமை (03-04) வரை நீடித்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

இஷாரா செவ்வந்தி போல் இருந்ததால் பெண்ணொருவர் கைது

  • April 2, 2025
  • 0 Comments

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட யுவதி ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இஷாரா செவ்வந்தி அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் […]

முக்கிய செய்திகள்

சுகாதார அமைச்சு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருவருக்கு விளக்கமறியல் 25 பேர் பிணையில் விடுதலை

  • March 28, 2025
  • 0 Comments

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட ஏனைய 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீட மாணவர் சங்கம் […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் 35 வயதுடைய பெண் திடீர் மரணம் காரணம் தெரியவில்லையென வைத்தியர்கள் கைவிரிப்பு

  • March 27, 2025
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்; நிர்வாகச் செயலாளரான சூ.சே. குலநாயகத்தின் மகள் ஆன் சுமங்கலா குலநாயகம் திடீர் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்தார் யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் இருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மரணத்துக்கான காரணத்தை அறிய முடியும் என வைத்தியசாலை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளன.

உள்ளூர்

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் தகவல் தெரிந்தால் ஞானசார தேரர் புலனாய்வுப்பிரிவுக்கு சொல்ல வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது

  • March 26, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய தகவல்களை அறிந்திருந்தால் அவை தொடர்பில் புலனாய்வுப்பிரிவுக்கு அறிவிக்க வேண்டியது ஞானசார தேரரின் கடமையாகும். அதனை விடுத்து ஊடகவியலாளர் மாநாடுகளில் அவை தொடர்பில் கூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், புலனாய்வுத்துறையின் ஊடாக அரசாங்கம் மத அடிப்படைவாதத்தைப் பரப்பும் குழுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அது குறித்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அனுராதபுரத்தில் 69 வயதுடைய விகாராதிபதி வெட்டிக்கொலை

  • March 26, 2025
  • 0 Comments

அநுராதபுரம் எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியிலுள்ள விகாரையொன்றினுள் கூரிய ஆயுதம் ஒன்றினால் விகாராதிபதி ஒருவரை வெட்டிக் கொலை செய்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய எப்பாவல பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று (25-03) எப்பாவல பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த எப்பாவல பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக வேண்டி பல கோணங்களிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எப்பாவல கிரலோகம […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிரித்தானியா தடை விதிப்பானது தமிழ் இளையோரின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்கிறது சர்வதேச மையம்

  • March 25, 2025
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் படைத்தளபதிள் மீதான பிரித்தானியாவின் தடை விதிப்பு தமிழ் இளையோரின் 3 வருட தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என்று பிரித்தானியாவிலுள்ள இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வசந்த கர்ணங்கொட, இராணுவ தளபதி ஜெகத் ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் மீது பிரித்தானியா தடை விதித்துத்துள்ளமை தொடர்பில் அவ்வமைப்பு தெரிவித்துள்ளதாவது, 2020 இல் நடைமுறைக்கு வந்த […]