உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ் பருத்தித்துறையில் துப்பாக்கி சூடு ; ஒருவர் காயம் ; மற்றுமொருவர் தப்பியோட்டம்

  • March 2, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் ரக வாகனம் மீது இன்று பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் , மற்றுமொருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினை பொலிஸார் மறித்த போது , பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை சாரதி தொடர்ந்து செலுத்தி செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மகிந்த அன் கம்பனி ஆட்சியில் 34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

  • March 2, 2025
  • 0 Comments

ராஜபக்ஷர்களின் ஆட்சியில் 34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசும் ஊடகவிலாளர்கள். கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் உண்மைகளை மூடி மறைப்பதற்கு ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு சாதகமான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று (01-03-2025) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவு

  • March 1, 2025
  • 0 Comments

கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் வெளிநாடு செல்வதை தடுத்து மாத்தறை நீதவான் நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், தேசபந்து தென்னகோனின் ஹோகந்தர மற்றும் கிரியுல்ல வீடுகளை சோதனை செய்த போதிலும், அவர் அந்த வீடுகளில் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 2023 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நீதிமன்ற படுகொலை தொடர்பில் மேலும் இருவர் கைது

  • March 1, 2025
  • 0 Comments

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த 19 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு நேற்று (28-02-2025) கைது செய்துள்ளனர் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் மினுவாங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ‘கணேமுல்ல […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாரென : ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

  • March 1, 2025
  • 0 Comments

புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருந்தது என்றும், இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் ‘சாந்தன் துயிலாலயம்’ அங்குரார்ப்பணம்

  • February 28, 2025
  • 0 Comments

எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் ‘சாந்தன் துயிலாலயம்’ சாந்தனின் தாயாரால் இன்று காலை 9 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் சாந்தனின் புகழுடல் புதைக்கப்பட்ட இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால் ‘சாந்தன் துயிலாலயம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சுமார் 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு விடுதலையான சாந்தன், குடிவரவு சட்டத்தின் கீழ் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் கடந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சஞ்சீவ கொலைக்குப் பழிதீர்க்கும் செயலே மினுவாங்கொடை துப்பாக்கிச்சூடு

  • February 27, 2025
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி மீதே நேற்று (26-2-2025) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மினுவங்கொடை – பத்தடுவன பகுதியில், கெஹெல்பத்தர பத்மே என்ற குற்றக் கும்பல் உறுப்பினரின் பாடசாலை நண்பர் என்று நம்பப்படும் 36 வயது நபர் மீது இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் சுமந்திரன் திட்டவட்டம்

  • February 26, 2025
  • 0 Comments

நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் என தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி ஊடக மையத்தில் நேற்று (25-02-2025) அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, உள்ளூராட்சிசபைத் தேர்தலில், நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட தீர்மானத்திற்கமைவாக தனித்துப் போட்டியிடுவோம். சபைகளில் ஆட்சி அமைக்கும்போது, கூட்டாக ஆட்சி அமைக்க முடியும். இது தொடர்பாக எமது கட்சித் தலைவர் தமிழ்த் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நாமல்

  • February 26, 2025
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே நாமல் ராஜபக்ஷ இன்றையதினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாதீட்டில் செல்வம் அடைக்கலநாதன் எம்பி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார் அர்சுனா எம்பி வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை

  • February 25, 2025
  • 0 Comments

நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயகவினால் கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு செலவு திட்டம் நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயகவினால் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று பாராளுமன்றத்தில் எழாவது […]