உள்ளூர் முக்கிய செய்திகள்

காலி துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்.

  • February 25, 2025
  • 0 Comments

காலி, தடல்ல மயானத்திற்கு அருகில் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். காலி, தடல்ல மயானத்திற்கு அருகில் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மற்றும் மனைவி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கணவன் உயிரிழந்துள்ள […]

உலகம் முக்கிய செய்திகள்

பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் ஆண்டகைக்காக மழையை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனை!

  • February 25, 2025
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (88) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலை மெல்ல தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டி ஆயிரக்கணக்கானோர் பிராரத்தனை செய்த சம்பவம் வாடிகனில் அரங்கேறியது. அதன்படி வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம் அருகே ஒன்று கூடிய மக்கள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பெண்ணை தேடியலையும் இலங்கை பொலிஸார், உதவினால் 10 இலட்சமாம். யாருதவுவர்?

  • February 25, 2025
  • 0 Comments

புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவிய பெண் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ‘கணேமுல்ல சஞ்சீவ’ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

குற்றச் செயல்களுக்கு துப்பாக்கி தீர்வாகாதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு

  • February 24, 2025
  • 0 Comments

சமூகத்தில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டத்திற்கு புறம்பான கொலைகள் ஒரு தீர்வாகாதுஎன தெரிவித்துள்ள ,லங்கை சட்டத்தரணிகள் சங்கம்,அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை பின்பற்றினாலே குற்றங்களைகட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது 2025பெப்ரவரி 19ம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குள் சந்தேக நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார், சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்தவேளை அவர் கொல்லப்பட்டார். அதன் பின்னர் 21ம் திகதி இரவு ,ரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரின் காவலில் இருந்தவேளை சுட்டுக்கொல்லப்பட்டனர், பொலிஸாருடனான மோதல் ஒன்றின் போதே […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது

  • February 24, 2025
  • 0 Comments

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை (27) முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதிவரை வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நடத்தப்படவுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த திங்கட்கிழமை அதாவது (17-02-2025 ) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமையுடன் […]

உலகம்

பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை கவலைக்கிடம் என வத்திகான் அறிவிப்பு

  • February 23, 2025
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபை தலைவரான 88 வயதுடைய பரிசுத்த பாப்பரசரின் பிரான்சிஸ் ஆண்டகையின் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வாடிகன் தேவாலயத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், […]

இலங்கை படையினருக்கும் பாதாள உலக குழுக்களுடன் தொடர்புண்டு என பாதுகாப்பு செயலாளர் ஒப்புதல்

  • February 22, 2025
  • 0 Comments

சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்றுள்ள ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்தகைய நபர்களைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். ஆயுதப் பயிற்சி பெற்று இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை மிகக் குறுகிய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

காட்டிக்கொடுத்தால் 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படுமென பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளார்

  • February 22, 2025
  • 0 Comments

நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற 58 குழுக்களும், அவற்றைப் பின்பற்றுகின்ற 1400 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். சமூகத்தில் ஆயுத புலக்கம் அதிகரித்துள்ளதால் அவற்றால் இடம்பெறக் கூடிய குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ரி- 56 ரக துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அத்து மீறும் இந்திய கடற்தொழிலாளர்களுக்கெதிராக எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் – தீவக கடற்தொழில் அமைப்பு

  • February 21, 2025
  • 0 Comments

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் வடக்கில் குறிப்பாக எமது தீவக பிரதேச கடற்தொழிலாளர்கள் மிக மோசமாக பாதிப்படைந்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்துமாறு நாம் பல போராட்டங்கள் கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதற்கான தீர்வு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அர்ச்சுனா எம்பி நல்லவரா கெட்டவரா? விசயமா?விசரா என ஆராய்நத குழு அறிக்கையை வெளியிட்டது

  • February 21, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை மற்றும் நடவடிக்கைகள் குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் பிரதித் தவிசாளரான ஹேமாலி வீரசேகரவின் தலைமையில் விஜித ஹேரத் மற்றும் ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக சபாநாயகர் தெரிவித்தார். அத்துடன், இந்த அறிக்கையானது, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு பரிந்துரைக்கப்படும் என […]