மட்டக்களப்பில் 1990 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இன்று நினைவேந்தப்பட்டனர்
1990ஆம் ஆண்டு சித்தாண்டி பகுதியில் நடைபெற்ற சுற்றிவளைப்பின்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தை நினைவுகூரும் நிகழ்வு இன்று சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமி கோவில் முன்றலில் இடம்பெற்றது. இந்த நினைவேந்தலை சித்தாண்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி அ.அ. அமலநாயகி, சட்டத்தரணி த. ஜெயசிங்கம், பிரதேச சபை உறுப்பினர் சி. வவானந்தன், சித்தாண்டி, முறக்கொட்டசேனை, சந்திவெளி பகுதிகளிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், […]